சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான "பீஸ்ட்" திரைப்படம் மயிலாடுதுறையில் இரண்டு திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது. திரைப்படத்தை காண ஏராளமான விஜய் ரசிகர்கள் திரையரங்குகள் முன் குவிந்தனர். இரண்டு திரையரங்குகளிலும் ரசிகர்களுக்காக 5 மணி சிறப்பு காட்சிகள் திரையிடப்பட்டது.
நாளை அம்பேத்கர் பிறந்தநாள் - மயிலாடுதுறை பட்டவர்த்தி கிராமத்தில் 144 தடை உத்தரவு அமல்
இந்நிலையில் இரண்டாவது காட்சி தொடங்குவதற்கு முன்பாக, திரையரங்கம் முன்பு விஜய் மக்கள் இயக்கத்தினர் மீண்டும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். திரையரங்கம் முன்பு தலைமைச் செயலகத்தில் விஜய் இருப்பதைப் போன்று பொருத்தப்பட்டிருந்த பேனரின் கீழ் இனிப்பு வழங்கி கொண்டாடிய தளபதி மக்கள் இயக்கத்தினர், வழக்கம்போல் கட்டவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்வதை தவிர்த்து, அதற்கு பதிலாக ஏழை மக்கள் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு பால் பாக்கெட்டுகளை வழங்கி கொண்டாடினர். இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் குட்டி கோபி உள்ளிட்ட ஏராளமான விஜய் மக்கள் இயக்கத்தினர் மற்றும் விஜய் ரசிகர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், திரைப்பட நடிகர்களின் ரசிகர்கள் என்றாலே படத்திற்கு போஸ்டர் ஒட்டுவதும், பேனர் களுக்கு பால் அபிஷேகம் செய்வதுதான் வழக்கம் என்ற எண்ணம் மக்களிடையே பரவலாக இருந்து வருகிறது. அதுபோன்ற விமர்சனங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக விஜய் மக்கள் இயக்கத்தினர் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட தொடர்ந்து செய்தி வருகின்றனர். அந்தவகையில் மயிலாடுதுறையில் மருத்துவ சேவையை துவங்கி மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு பிரசவம், விபத்து மற்றும் மகப்பேறு முடிந்து தாய், சேய் இலவசமாக வீடுகளுக்கு திரும்ப செல்ல ஊரடங்கு நாட்களில் இலவசமாக 2 கார்களை பயன்படுத்த விஜய் மக்கள் இயக்கத்தினர் மருத்துவமனை நிர்வாகத்திடம் வழங்கி உள்ளனர்.
அதேபோன்று கொரோனா காலக்கட்டத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை காலத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை வழங்கினர். அதேபோன்று கொரோனா காலத்தில் வாழ்வாதாரத்தை இழந்து தவித்த ஏழை கூலி தொழிலாளர்களுக்கு மாதம் 200 ரூபாய் உதவித் தொகைகளை வழங்கினார். தொடர்ந்து பல பொதுநல சேவைகளை செய்துவரும் மயிலாடுதுறை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தினரின் செயல் அனைத்து மாவட்ட விஜய் ரசிகர்களுக்கு முன் உதாரணமாக திகழ்ந்து வருவதாக பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.