1- திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் உள்ள ஒவ்வொரு வீடுகளுக்கும் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கத்துடன் மத்திய அரசால் நாடு முழுவதும் ஜல்ஜீவன் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது இத்திட்டத்திற்காக ரூபாய் 50 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 2021- 22 ஆம் ஆண்டுக்கான திட்ட அறிக்கையை தமிழக அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை கால தாமதப்படுத்தி வருகிறது. அக்டோபர் இறுதிக்குள் இந்த அறிக்கையை சமர்பிப்பதாக  உறுதியளித்துள்ளனர். இத்திட்டத்தில் தமிழக அரசின் செயல்பாடு சராசரியாக தான் உள்ளது. மத்திய உணவு பதப்படுத்துதல் தொழிற்சாலைகள் மற்றும் நீராதாரத்துறை  இணை அமைச்சர் பிரகலாத் சிங் படேல் தெரிவித்தார். 


2- திருச்சி மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்க கொசுவலையுடன் கூடிய படுக்கை வசதியை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தியுள்ளது.


3- திருச்சி மாவட்டத்தில் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்திய 10  ஊராட்சிகளுக்கு  தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.


4- திருச்சி மாவட்டத்தில் மூன்றாவது வாரமாக நடைபெற்ற மேகா தடுப்பூசி மருத்துவ முகாமில் நேற்று ஒரே நாளில் 1 லட்சம் பேருக்கு மேல் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது .


5.  நாகை மாவட்டம், தமிழ்நாடு மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லும்போது எல்லையை தாண்டி செல்வதால் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இவற்றை முற்றிலுமாக தடுக்கும் வகையில் இந்திய கடலோர பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் நேற்று 38 மீனவர்கள் 4 விசைப்படகுகளில் எல்லை தாண்டி மீன் பிடிக்க சென்ற போது அவர்களை பாதுகாப்பு படையினர் அழைத்து விசாரணை நடத்தி மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர் மேலும் மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பது தவறு என்றும் அறிவுரை வழங்கினார்.


6. நாகை மாவட்டம் அருகே கீழவேளூர் அடுத்த தேவூரில், தேன்மொழி உடனுரை தேவபுரீஸ்வரர் கோயில் 4-ஆம் நூற்றாண்டு காலத்தில் சங்க சோழனால் கட்டப்பட்ட கோயிலாகும் இதில் அருகே நவக்கிரகங்கள் சாமி வைக்க தோண்டப்பட்ட இடத்தில் 17 ஐம்பொன் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


7. நாகை மாவட்டத்தில் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் அவர்கள் தலைமையில் அயோடின்  பற்றாக்குறையால் பல்வேறு குறைபாடுகள் ஏற்பட்டுவருகிறது ஆகையால் அயோடின் கலக்காத பொருளை தயாரித்தால் அவர்களால் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.


8. வடகிழக்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலமானது நேற்று முன்தினம் புயலாக மாறியது. இதனால் நாகை மாவட்ட துறைமுகத்தில் இரண்டாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றபட்டுள்ளது.


9. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு வெள்ளம் பெரம்பூர்,தென் பெரம்பூர் ஆகிய பகுதிகளில் குறுவை சாகுபடி நெல் மூட்டைகள் நுகர்பொருட்கள் வாணிப  காலதாமதம் பொருத்துவதால் வீணாகும் நெல்மூட்டைகள் என விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர், இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.


10. தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவருக்கும் தடுப்பூசியை செலுத்தி 21 கிராமங்கள் சாதனை படைத்துள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.