நாகை மாவட்டத்தில் சாலையே தெரியாத அளவிற்கு 3வதுநாளாக கடும் பனிப்பொழிவு ஏற்பட்டது. முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடியே வாகன ஓட்டிகள் சென்றனர்.
நாகை மாவட்டம் முழுவதும் 3வது நாளாக கடும் பனிப்பொழிவு காரணமாக சாலைகள் அனைத்தும் புகை மண்டலமாக மாறி காட்சியளிக்கிறது. காலை 8 மணிக்குப் பின்னர் 9 மணியை நெருங்கும் நிலையிலும் பனிமூட்டம் கடுமையாக இருப்பதால் வாகன ஓட்டிகள் சாலை தெரியாததால் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி தங்களது வாகனங்களில் செல்கின்றனர். மேலும் அன்றாட பணிகளுக்கு செல்வோரும் பாதசாரிகளும் உடற்பயிற்சி மேற்கொள்வோரும் இந்த பனிப்பொழிவு காரணமாக கடும் அவதிக்கு ஆளாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை, நாகூர், தேவங்குடி, வேளாங்கண்ணி, கீவளூர், கீழையூர், திருக்குவளை திருப்பூண்டி உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. கிராமப்புறத்தில் உள்ள குளம் ஆறு வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளும் பனியால் முழுமையாக சூழ்ந்து பனி போர்வை போர்த்தியது போல காட்சியளிக்கிறது.காலை 8 மணியைக் கடந்தும் பனிப்பொழிவின் தாக்கம் குறையாமல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தப் பனிப்பொழிவு காரணமாக சம்பா நெற்பயிர்களை கொள்ளிக்கருப்பான் நோய் தாக்கி இருப்பதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் உளுந்து பயிர்களில் சாம்பல் நோய், மஞ்சளில் இலை கருகல் நோய் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட்டிப்பதாகவும் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் அனுப்பலாம்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்