தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழ்நாடு அரசு அனைத்து சுகாதார செவிலியர்கள் சங்கம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் விசாலாட்சி தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் சீதாலெட்சுமி, பொருளாளர் திருமாமகள் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தடுப்பூசி நாளன்று தடுப்பூசி பணியுடன் யு-வின் ஆப் சென்ற புதிய செயலி மூலம் டேட்டா என்ட்ரி பணியையும் சேர்த்து பார்த்திட வலியுறுத்தும் அரசின் அரசாணையை திரும்ப பெற வேண்டும். அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் ஒரு டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டரை நியமிக்க வேண்டும். இதனால் சுகாதார செவிலியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும்.
முற்றிலும் பழுதடைந்த தங்குவதற்கு தகுதியில்லா துணை சுகாதார மைய கட்டிடங்களுக்கு வாடகை பிடித்தம் செய்வதை நிறுத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும். அலுவலக நேரம் தவிர்த்து இரவு நேரங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்துவதை தவிர்த்து, பணிக்கு சம்மந்தமில்லாத வேலைகளை செய்யச் சொல்லி மிரட்டுவதை கைவிட வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சுகாதார செவிலியர்கள் கலந்து கொண்டனர்.
தேமுதிக ஆர்ப்பாட்டம்: அனைத்து பெண்களுக்கும் ரூ.1000 வழங்கக்கோரி தஞ்சையில் தே.மு.தி.க.வினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஒருங்கிணைந்த தஞ்சை மாவட்ட தே.மு.க.தி.க. சார்பில் தஞ்சை ரயிலடியில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணை செயலாளர் பார்த்தசாரதி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர்கள் டாக்டர் ராமநாதன் (தஞ்சை மாநகர்), பழனிவேல் (தஞ்சை தெற்கு), சங்கர் (கும்பகோணம் மாநகர்), சுகுமார் (தஞ்சை வடக்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் உயர்மட்டக்குழு உறுப்பினர் முகமதுஅலி, மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் பூபேஷ்குமார் ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. அளித்த வாக்குறுதிபடி அனைத்து பெண்களுக்கும் மாதம் ரூ.1000 வழங்கவேண்டும். காவிரி நீரை கர்நாடக அரசு உடனடியாக திறக்க வேண்டும். இதற்கு தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் உட்பட அனைத்து அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
தஞ்சையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
என்.நாகராஜன்
Updated at:
10 Aug 2023 07:57 PM (IST)
கிராம சுகாதார செவிலியர்கள் 5 வருடம் பணி முடித்தவர்களுக்கு பதவி உயர்வும், ஊதிய உயர்வும் வழங்க வேண்டும்.
சுகாதார செவிலியர்கள் ஆர்ப்பாட்டம்
NEXT
PREV
Published at:
10 Aug 2023 07:57 PM (IST)
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -