திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே உள்ள ஆலங்குடியில் உலக பிரசித்தி பெற்ற ஆபத்தாகேஸ்வரர் கோவில் தேவாரம் பாடல் பெற்றது. பாற்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்களை ஆபத்திலிருந்து காத்ததால் ஆபத்து சகாயர் எனும் பெயர் இங்கிருக்கும் இறைவனுக்கு சூட்டப்பட்டது உள்ளது.
குரு பெயர்ச்சி விழா:
இவ்வாறு சிறப்புமிக்க இந்த ஆலயத்தில் குரு பகவான் சுவாமிக்கு என்று தனி சன்னதி உள்ளது. நவகிரகங்களில் உள்ள குரு பகவானுக்கு பரிகாரத்தலமாகவும் விளங்கி வருகிறது குருவைப் போல் கொடுப்பவர் இல்லை” என்பதால் ஞானசெல்வமான கல்வியிலிருந்து பொருட் செல்வமான பொன்வரை அனைத்தையும் நல்குபவர் குருபகவான் என்பது நம்பிக்கை. ”குருபார்க்க கோடி செல்வம்” என்று சொல்வார்கள் அவ்வாறு சிறப்புமிக்க கோவிலாக ஆலங்குடி கோவில் விளங்கி வருகிறது.
ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்:
ஆண்டுதோறும் குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சியாக நடைபெறும் இந்த கோவிலில் நடைபெறும் ஆலங்குடி மட்டுமல்லாது தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குரு பகவானை தரிசிக்க வருவார்கள்.
அந்த வகையில் இன்று குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு குரு பகவான் சாமிக்கு பால் மஞ்சள் இளநீர் போன்ற திரவிய பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது மேலும் 11 27 மணியளவில் குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைந்தார்.
பலத்த பாதுகாப்பு:
அப்போது மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது மேலும் குரு பெயர்ச்சி விழாவை முன்னிட்டு கோவில் நிர்வாகம் சார்பில் நீண்ட தகரத்தாளான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது மேலும் குற்ற சம்பவங்களை கண்காணிக்க 47 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.
அதேபோல பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று குருபகவானை தரிசிக்க தடுப்புகள் அமைக்கப்பட்டு பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் சுகாதாரம் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஊராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. மேலும் பாதுகாப்பு பணியில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் மேற்பார்வையில் 500க்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
சிறப்பு பேருந்துகள்:
திருவாரூர் மாவட்டம் மட்டுமின்றி தஞ்சாவூர் மயிலாடுதுறை திருச்சி சென்னை உள்ளிட்ட தமிழகத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகைபுரிவதை முன்னிட்டு சிறப்பு பேருந்து வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது தற்போது குரு பெயர்ச்சி விழா வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது.
மேலும் கடந்த ஏப்ரல் ஆறாம் தேதி முதல் 10ஆம் தேதி வரை முதற்கட்ட லட்சார்ச்சனை நடைபெற்றது குரு பெயர்ச்சிக்கு பின்னர் ஏப்ரல் 18ஆம் தேதி இருந்து 22 ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட லட்சாசனையும் நடைபெற உள்ளது இதில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருட்சிகம், மகரம், கும்பம், ஆகிய ராசிக்காரர்கள் பரிகாரம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.