மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறையில் மகாதான வீதியில் முத்துக்குமார்- ஜெயந்தி தம்பதியினரின் வீட்டில் செல்லப் பிள்ளையாக வளர்ந்து வருகிறது ஜில்லுபட்டு என்கின்ற பச்சைக்கிளி. இவர்களது குடும்பத்தின் ஒரு அங்கத்தினராக வளர்ந்து வரும் ஜில்லுபட்டு பச்சைக்கிளி தம்பதியினர் குழந்தைகளான இலேஷ்குமார், ஹரிதாஸ் ஆகியோருடன் காணும் பொங்கலன்று அவர்களது தோளில் அமர்ந்து வெளியே உலா சென்றுள்ளது. 




அப்போது சிறுவர்கள் விளையாட்டுப் போட்டிகளை கலந்து கொண்டதைக் கண்டு தானும் விளையாட வேண்டும் என்ற நோக்கில் வீட்டிற்கு வந்த பிறகு பலூனை எடுத்து அவர்களது கையில் கொடுத்து சிறுவர்களை விளையாட அழைத்ததாக செல்லப்படுகிறது. சிறுவர்கள் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டபோது பலூனை பந்து போல் நினைத்து தனது அலகினால் உந்தி விளையாடச் சொல்லி சிறுவர்களிடம் விளையாடவா விளையாடவா என்று தனது அழகிய குரலால் பேசி அழைத்துள்ளது.



பிறகு சிறுவர்களுடன் கிளி விளையாடிய காட்சி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. இச்செயலை கண்ட சிறுவர்களும் கிளியுடன் உற்சாகமாக விளையாடிய காட்சியை முத்துக்குமார் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த வீடியோ இணையதளத்தில் வைரலாகி பரவி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி வருகிறது.  மேலும் நான் கிளியல்ல உங்கள் குடும்பத்தில் ஒருவன், நானும் உங்கள் குழந்தை என்று ஜில்லுபட்டு பச்சைக்கிளி சொல்லாமல் சொல்லியுள்ளது.




மயிலாடுதுறை அருகே பிறவியிலேயே கை, கால்கள் இல்லாமல் பிறந்த குழந்தையின் தாயாருக்கு குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமன ஆணையை மாவட்ட ஆட்சியர் லலிதா, பூம்புகார் எம்எல்ஏ நிவேதாமுருகன் ஆகியோர் வழங்கினர்.


மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுகா கஞ்சாநகரம் கிராமத்தில் வசித்து வருபவர் ராணி. இவருக்கு ஏற்கெனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மூன்றாவதாக கடந்த ஆண்டு ஆண்குழந்தை ஒன்று பிறந்துள்ளது. இந்த குழந்தைக்கு பிறக்கும்போதே இரண்டு கைகள் மற்றும் இரண்டு கால்கள் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் இவரது கணவர் முருகன் மனைவியுடன் சண்டையிட்டு குடும்பத்தைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். இந்நிலையில், சிரமமான சூழலில் ராணி குழந்தைகளை பராமரித்து வருகிறார். 




இந்நிலையில் குழந்தை பிறந்தவுடன் குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்ந்து விட கோரி மாவட்ட ஆட்சியரிடம் ராணி கோரிக்கை வைத்தார், அப்போது அவருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தான் செய்வதாகவும், குழந்தையை தாங்களே வளர்ப்பதற்கு முயற்சி செய்யுங்கள் என கூறி அனுப்பிய நிலையில் தற்போது, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா ராணியை ஆட்சியர் அலுவலகத்திற்கு அழைத்து செம்பனார்கோயில் குழந்தை வளர்ச்சித் திட்ட அலுவலகத்தின் கீழ் இயங்கிவரும் கஞ்சாநகரம் அய்யனார் குழந்தைகள் மையத்தில் குழந்தைகள் மைய உதவியாளருக்கான பணி நியமண ஆணையை மாவட்ட ஆட்சியர் லலிதா, மற்றும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் ஆகியோர் கூட்டாக வழங்கியுள்ளனர்.