தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தைச் சேர்ந்த 75 வயதான மூதாட்டி, ஆதரவற்ற நிலையில், இருப்பதால், முதுமை காலத்தில் நாள் முழுவதும் கடும் பனியிலும் வெயிலிலும் சாலை ஓரத்தில் படுத்துக்கிடக்கும் பரிதாபம். இவருக்கு தஞ்சை மாவட்ட கலெக்டரும், சமூக ஆர்வலர்களும் தங்களால் இயன்ற உதவிகளைச் செய்திட வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள். கும்பகோணத்தை சேர்ந்த வைரம் மூதாட்டியான இவர், இப்பகுதியில உள்ள ஒரு வீட்டுல பல வருசமா தங்கியிருந்து, வீட்டு வேலைகள் செஞ்சு  கொடுத்துக்கிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.


ஆனால்  கொரோனோவால், இவரோட வாழ்க்கையில நெருக்கடியான சூழல் ஏற்பட்டது. மூதாட்டிக்கு கொரோனா பாதிப்பு எதுவும்  இல்லை என்றாலும், அச்சத்தால், அந்த வீட்டின் உரிமையாளர்கள், தங்களோட இருக்க விடாமல் வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்கள்.  அதன் பிறகு தள்ளாத வயதிலும் பல வீடுகள், கடைகளில் வேலை செய்வதற்காக கேட்டுள்ளார். ஆனால் யாரும் வேலை கொடுக்க வில்லை. இதனால் மன வேதனையடைந்த மூதாட்டி வைரம் மேலும் பலமிழந்த நிலைக்கு ஆளானார். அதன் பிறகு, கும்பகோணம் ஶ்ரீசக்கரபாணி கோவில் சன்னிதி தெருவுல உள்ள ராஜகோபுர வாசலுக்கு முன்பு,  சாலை ஓரத்தில் இரவு பகல் 24 மணிநேரமும்  படுத்துக் கிடக்கின்றார்.



மூதாட்டி, மற்றவர்களிடம் யாசகம் பெற்று வாழணும்னு நினைக்காமல்,  கொரோனா  பிரச்னைக்கு முன்பு வரை இவர் உழைச்சு சம்பாதித்து வாழ்ந்துள்ளார்.  தற்போது  முதுமை காரணமா உடல் ஆரோக்கியம் இல்லாமல் கஷ்டப்பட்டு வருவதாலும், வருமானம் ஏதும் இல்லாமல் தவித்து வருகின்றார். யாரிடமும் சென்று கையேந்தாமல் இருந்து வரும் மூதாட்டிக்கு,  வழிபோக்கர்கள், பொது மக்கள், இந்தப் பகுதியில வசிக்கக்கூடியவர்கள் வழங்கும் உணவுகளைச் சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றார்.  சிலர் உடைகளையும் வழங்கி உள்ளனர்.  மூதாட்டி வைரத்திற்கு  வீடு இல்லாததால் முகவரி  இல்லை, குடும்ப அட்டை, ஆதார் அட்டை என்று எதுவும் இல்லை. ஆகையால் அரசின் உதவிகள் எதையும் பெற இயலாத நிலையில உள்ளார்.



இந்நிலையில் மூதாட்டி வைதரத்தின் நிலையை அறிந்த கும்பகோணம் அனைத்துத் தொழில், வணிகச் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளர் சத்தியநாராயணன், தஞ்சை மாவட்ட கலெக்டர், கருணை அடிப்படையில் இந்த மூதாட்டிக்கு, அரசு சார்பில் வசிப்பிடம் ஒன்று அளித்தால் சேவை அமைப்புகள் துணை கொண்டு குடில் ஒன்றை அமைத்துக் கொடுக்க முயற்சி செய்யலாம். இதன் மூலம் தனது இறுதிக் காலத்தைத் தனது வசிப்பிடத்தில் அந்த மூதாட்டி அமைத்துக்கொள்ள இயலும் என கோரிக்கை விடுத்தார். இது குறித்து மாவட்ட நிர்வாகத்தினர், மூதாட்டி வைரத்தை தங்க வைப்பதற்கு ஏதாவது ஒரு விடுதியில ஏற்பாடு செய்றோம். அடுத்தடுத்து, மற்ற அரசு உதவிகள் கிடைக்கப் பரிசீலனை செய்வோம் என தெரிவித்துள்ளனர்.