தஞ்சை மாவட்டம், பள்ளி அக்ரஹாரத்தில் தர்மபுர ஆதீனம் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானதிற்கு கும்ப மரியாதையுடன் மேளதாள வாணவேடிக்கையுடன் வரவேற்பு நடைபெற்றது. தஞ்சாவூரை அடுத்த பள்ளி அக்ரஹாராத்தில் இருபத்தி ஏழாவது குருமகாசன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் ஞானரதம் யாத்திரை செல்கிறார் அவரை வாணவேடிக்கை மேளதாளம் கச்சேரி உடன் பூரண கும்ப மரியாதை கொடுத்து திருவையாறு ஐயாறப்பர் ஆலய குருக்கள் அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். தருமபுர ஆதீனம் பூந்துறையில் குடமுழுக்கு விழாவிலா கலந்துகொள்கிறார்.




காலையில் தருமபுர ஆதீனத்தில் இருந்து புறப்பட்டு தஞ்சையை வந்தடைந்தார் பிறகு தஞ்சை பிரகதீஸ்வரர் ஆலயத்தின் முன்பு சாமி தரிசனம் செய்து மீண்டும் மதுரைக்கு புறப்பட்டு சென்றார். அவர் மதுரையில் இருந்து ராமேஸ்வரம் புறப்பட்டு சிவபெருமானை வழிபடுகிறார் பிறகு ராமேஸ்வரத்தில் இருந்து திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமியை வழிபடுகிறார். அங்கிருந்து  திருநெல்வேலி புறப்பட்டு திருஞானசம்பந்த நிலையத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமான்  பூந்துறையில் சிவாலயத்தில் முதற்கால யாகசாலை பூஜையில் பங்கேற்று, பிறகு நான்காம் யாகசாலை பூஜையில் பங்கேற்று  மகா சன்னிதானம் முன்னிலையில் குடமுழுக்கு நடைபெறுகிறது. .பிறகு திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு சுசீந்திரம் சென்று பிறகு ஸ்ரீவில்லிபுத்தூர் சென்று அன்று இரவு 16ஆம் தேதி இரவு தருமபுர ஆதீன மடத்திற்கு சென்றடைகிறார்.




 


தஞ்சாவூர் பெரியகோயில் எனும் பிரகன்நாயகி சமேத பிரகதீஸ்வரர் கோயிலில் தருமபுர ஆதீனம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தார். அவரை பொது மக்கள், பக்தர்கள் வரவேற்பளித்தனர். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், தருமபுரத்திலிருந்து, முதன்முதலாக ஞானரதயாத்திரை தொடங்கி உள்ளோம். நாங்கள், பூஜைகள் செய்யாமல் வெளியில் செல்லக்கூடாது. பாதயாத்திரையாக தான் செல்ல வேண்டும். நீண்ட துார பாதயாத்திரையாக செல்ல முடியாது என்பதற்காக, கோயில் போன்று வாகனத்தை தயார் செய்து பயணம் செய்கின்றோம்.  எங்களது பூஜா மூர்த்தி மதுரை சொக்கநாதர் என்பதால், தரிசனம் செய்து விட்டு, ராமேஸ்வரம், திருச்செந்துார், திருநெல்வேலிக்கு சென்று, சிவசைலம் மற்றும் திருநெல்வேலியிலுள்ள அங்குள்ள இரண்டு சன்னிதான கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்கின்றேன்.


இந்த ஆன்மீகப்பயணம் சமயத்தை பரப்புவதற்காக நடைபெறுகின்றது. சைவத்தை நிலை நிறுத்துவதற்காக, இங்கிருந்து, ஞானசம்பந்தர்,  சோழ நாட்டிலிருந்து, பாண்டியன் நாட்டிற்கு சென்று சைவம் திருநீறும் விளங்க செய்ய வேண்டும் என அங்கு சென்றார். மீண்டும் அங்கு சைவத்தை நிலை நிறுத்துவதற்காக இப்பயணத்தை மேற்கொண்டுள்ளேன். இந்த யாத்திரை ஐந்து நாட்களில் முடிவடையும். அடுத்ததாக வடநாட்டில் நடைபெறும் துங்கபத்ரா புஷ்கர விழாவில் கலந்து கொள்வதற்காக வரும் 29ஆம் தேதி ஆன்மீக பயணத்தை தொடங்கவுள்ளேன் என்றார்.