இந்தியர்கள் மீது விதித்த உப்பு உற்பத்தி வரியை எதிர்த்து, மகாத்மா காந்தி தண்டியில் நடத்திய உப்புச் சத்தியாகிரகம் போன்று, தமிழ்நாட்டின் வேதாரண்ய கடலில் உப்பு அள்ளும் போராட்டமாக 13 ஏப்ரல் 1930 அன்று வேதாரணியம் உப்புச் சத்தியாகிரகம் நடைபெற்றது. அதனை நினைவு கூறும் வகையிலும் 75 வது சுதந்திர தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகவும் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் KV. தங்கபாலு தலைமையில் திருச்சியில் இருந்து வேதாரணியம் வரை பாதயாத்திரை கடந்த 13ஆம் தேதி திருச்சியில் தொடங்கி கடந்த 28ஆம் தேதி வேதாரண்யம் வந்தடைந்தனர்.

 



 

இந்த நிலையில் காலை உப்பு சத்தியாக்கிரக நினைவு கட்டிடத்தில் இருந்து முன்னாள் மத்திய அமைச்சர் கே.வி.தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்பேரணியாக அகஸ்தியன் பள்ளியில் உள்ள உப்பு சத்தியாகிரக நினைவு ஸ்தூபிக்கு சென்றனர்.

 

அங்கு உப்பு சத்தியாக்கிரக நினைவு ஸ்தூபியில் முன்னாள் மத்திய அமைச்சர் கே வி தங்கபாலு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன் மற்றும் தியாகிகள், காங்கிரஸ் கட்சியினர் உப்பு அள்ளி மலர்தூவி மறைந்த தியாகிகளுக்கு மரியாதை செலுத்தினர்.  பின்பு பள்ளி மாணவர்கள் மற்றும் தியாகிகள் காங்கிரஸார் தேசபக்தி பாடல்களை பாடினார்.



 

இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் கேள்வி தங்கபாலு காங்கிரஸ் சட்டமன்ற தலைவர் செல்வபெருந்தகை தமிழக பொறுப்பாளர் டாக்டர் ஸ்ரீ வல்ல பிரசாத் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயக்குமார், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.வி.ராஜேந்திரன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் பொன் கிருஷ்ணமூர்த்தி, விஷ்ணு பிரசாத், தமிழ்நாட்டுத் தலைவர்கள், தொட்டியம் சரவணன், குளித்தலை பிரபாகர்,வேதரத்தினம், மகிளா காங்கிரஸ் தலைவர் சுதா ராமகிருஷ்ணன், சிறுபான்மை தலைவர் அசம் பாஷா, மனித உரிமை தலைவர் மகாத்மா சீனிவாசன், சிடி மெய்யப்பன் சேலம் மாநகர துணை மேயர் சாரதா தேவி, முருகானந்தம், தியாகி ஜோதி கண்ணன்,அரியலூர் மாரியம்மா, தஞ்சை ஜீவா, கடலூர் புஷ்பா, தஞ்சை லதா, தஞ்சை உமா, மகேஸ்வரி சேலம், வினோத், இளைஞர் காங்கிரஸ் தலைவர் ஆப்கான், ஆர் கணேசன் ஊட்டி எம்எல்ஏ நாகராஜ், மயிலாடுதுறை எம் எல் ஏ ராஜ்குமார், மாநிலச் செயலாளர், டிசி. சிவலிங்கம்.ஆர். தாமோதரன், ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் நாகை மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவர் சத்யகலா செந்தில்குமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் துரைராஜ், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.