ஒக்கி புயலால் கடலில் மூழ்கிய சாமந்தான்பேட்டை மீனவரின் விசைபடகுக்கு இழப்பீடும்,  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என நாகையில் நடைபெற்ற மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

நாகை மாவட்ட மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் நாகை ஆட்சியர் அலுவலகத்தில் மீனவர் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கூடுதல் ஆட்சியர் ரஞ்சித்சிங் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் அக்கரைப்பேட்டை, கீச்சாங்குப்பம், நம்பியார்நகர், செருதூர், நாகூர், கோடியக்கரை புஷ்பவனம் ஆற்காடுதுறை உள்ளிட்ட  மீனவ கிராமத்தைச் சேர்ந்த  தலைவர்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில்  தமிழக மீன்வளர்ச்சி கழக தலைவர் கௌதமன் சுமார் 80 லட்ச ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மீனவர்களுக்கு வழங்கினார்.

மாவட்டத்தில் சுனாமி பாதிப்பின் போது அனைத்து மீனவர்களுக்கு வழங்கப்பட்ட  வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், மீனவர்கள் சமுதாயத்தை பழங்குடியினத்தவர் பட்டியலில் சேர்க்க வேண்டும், ஒக்கி புயலில் மூழ்கிய சாமந்தான்பேட்டை மீனவரின் விசைபடகுக்கு இழப்பீட்டு தொகையும்,  உயிரிழந்த மீனவர்களின் குடும்பத்தினர் ஒருவருக்கு தமிழக அரசு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை மீனவர்கள் முன்வைத்தனர். அவர்களிடம் தமிழ்நாடு மீன் வளர்ச்சி கழக தலைவர் கவுதமன் தெரிவித்த போது தமிழ்நாடு அரசு மீனவர்களுக்கு நிறைய திட்டங்களை செயல்படுத்துகிறது என்பதை நம்பியார் மீனவ கிராமத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

மாவட்டத்தில் பல்வேறு மீனவர் கிராமங்களில் வளர்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகிறது தங்களது கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என தெரிவித்தார் .

 

இக்கூட்டத்தில் சார் ஆட்சியர் ரஞ்சித்சிங், மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணை இயக்குநர் இளம்வழுதி, உதவி இயக்குநர் ஜெயராஜ், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அருளரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

 


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.











ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண