மத்திய அரசு, நடப்பு பட்ஜெட்டில் உர மானியம் குறைத்ததை காரணம் காட்டி, டிஏபி, மற்றும் கலப்பு உரங்களின் விலையை தனியார் உரம் நிறுவனங்கள் ஏற்றி உள்ளன. 50 கிலோ எடை கொண்ட டிஏபி உரை மூட்டைக்கு 150 ரூபாய் உயர்த்தப்பட்டு 1,350 ரூபாய்க்கும் கலப்பு உரம் மூட்டை ஒன்றிற்கு 100 ரூபாய் உயர்த்தப்பட்டு 1475 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உர உற்பத்தி நிறுவனங்களே தங்களது உரங்களின் விற்பனை விலையை நிர்ணயம் செய்துகொள்ளலாம் என விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளதன் மகாரணமாக அவ்வப்போது உர விலை ஏற்றம் செய்யப்பட்டு வருகிறது.
உரம் விலை உயர்வு தொடர்பாக விவசாயிகள் கூறுகையில், நடப்பு பட்ஜெட்டில் உர உற்பத்தி நிறுவனங்களுக்கான மானியத் தொகையை 50 சதவிகிதம் மத்திய அரசு குறைத்துள்ளது. உரத்தின் விலையை ஏற்றி விவசாயிகளிடம் தங்களுடைய நஷ்டத்தை சரி கட்டிக்கொள்ள உறவு உற்பத்தி நிறுவனங்கள் முயற்சிக்கின்றன. அதன் விளைவாகவே இத்தகைய விலை ஏற்றங்கள் உள்ளது. ஏற்கனவே விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்கொண்டு விவசாய தொழிலை விட்டு மாற்று வேலைகளுக்கு செல்ல தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் இது போன்ற விலை ஏற்றம் விவசாயிகளுக்கு பெரும் துன்பத்திற்கு தள்ளி இருப்பதாக விவசாயிகள் கவலை பட தெரிவிக்கின்றனர். மேலும் காவிரி டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பிரதான சாகுபடியாக உள்ளது. கடந்த பல ஆண்டுகளாக தண்ணீர் பிரச்சினை மற்றும் இடுபொருட்களின் விலை உயர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களினால் சாகுபடி நிலத்தின் பரப்பளவு ஆண்டுக்காண்டு குறைந்து கொண்டே வருகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர் இந்த நிலையில் தற்போது விவசாயிகள் அதிகம் பயன்படுத்தக்கூடிய உரத்தின் விலையை தொடர்ந்து உயர்த்திக் கொண்டே சென்றால் விவசாயம் செய்ய முடியாத நிலை உருவாகும். அதேநேரத்தில் நெல்லுக்கான ஆதார விலையை உயர்த்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை வைத்து வருகிறோம் ஆனால் ஒரு கிலோவுக்கு 50 பைசா என்ற வீதத்தில் மட்டுமே விலை ஏற்றுகிறார்கள் ஆனால் உரத்தின் விலையோ ஆறு மாதத்திற்கு ஒரு முறை 200 ரூபாய் 300 ரூபாய் என விலை உயர்த்திக் கொண்டே செல்கிறார்கள் ஆகையால் மத்திய மாநில அரசுகள் விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு உரத்தின் விலையை குறைப்பதற்கான நடவடிக்கையை உடனடியாக எடுக்க வேண்டும் என விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.