மயிலாடுதுறை மாவட்டம் சங்கரன்பந்தல் ,சோழம்பேட்டை , சீர்காழி ஆகிய பகுதிகளில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி மற்றும்  நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை புதிய கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் முன்னிலையில் நடைபெற்றது.




Coimbatore: கோவையில் பாதுகாப்பு தொழில் நிறுவனம் - அமைச்சர் தங்கம் தென்னரசு சொன்ன சூப்பர் தகவல்!


மாவட்ட ஆட்சியர்  லலிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு படித்த பட்டதாரி பயனாளிகளுக்கு நிதி உதவியுடன் கூடிய  தாலிக்கு தங்கத்தை வழங்கினார். 




குறையும் கொரோனா...! இயல்பு நிலைக்கு திரும்பும் ரயில்வே...! இணைக்கப்படும் முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகள்


இதில் மாவட்டம் முழுவதும் உள்ள 1660 பயனாளிகளுக்கு 6 கோடியே 79 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உதவி தொகை மற்றும் தாலிக்கு தங்கம் ஆகியவை வழங்கப்பட்டன. முன்னதாக சிறப்புரையாற்றிய சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றம் துறை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் மெய்யநாதன் பேசிய போது, பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டு செல்வதாகவும், ஒரு லிட்டர் பெட்ரோல் விலையில் இருந்து 32 ரூபாய் பிரதமரின் கஜானாவுக்கு செல்வதாகவும், அது மீண்டும் ஏழை எளிய மக்களுக்கு திட்டமாக வரவில்லை எனவும்,  அதற்கு பதிலாக கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு திருப்பிவிடப்படுகிறது என்று  விமர்சித்தார்.


IPL 2022: 'என் வீட்டு கன்னுக்குட்டி..' கோலி விக்கெட்டை எடுத்த சாஹல்! மீம்ஸ்களை தெறிக்கவிட்ட ரசிகர்கள்!


வளர்ந்து வரும் மயிலாடுதுறை மாவட்டத்தில் 36 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் மற்றும் பாதாள சாக்கடை மறுசீரமைப்பு ஆகிய திட்டங்கள் செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளும், கட்சி நிர்வாகிகள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.




தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் தற்போது பட்ஜெட் கூட்டத்தொடரில் நிறுத்தப்பட்டு அதற்கு மாற்றாக உயர்கல்வி பயிலும் மாணவிகளுக்கு மாதம் 1000 ரூபாய்  திட்டத்தை அறிமுகம் செய்துள்ள நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்வு இதுவே கடைசி என்பது குறிப்பிடத்தக்கது.