மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அடுத்த வாணகிரி மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மனைவி சுதா, மகன் மதன் இவர்களிடையே குடும்ப தகராறு ஏற்பட்டு கருத்து வேறுபாடு காரணமாக மனைவி, மகன் தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் தந்தை ராஜேந்திரன் மகன் மதன் மீது மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொய் புகார் அளித்து தனக்கு வேண்டிய காரைக்காலில் இயங்கி வரும் தனியார்  மனநல காப்பகத்தில் உள்ள உரிமையாளர் உதவியுடன் அடியாட்களை சேர்த்துக்கொண்டு வாணகிரி வீட்டில் இருந்த மகனை நள்ளிரவு அத்துமீறி உள்ளே புகுந்தது  காரில் கடத்தியுள்ளார்.




Vice President Election 2022 : குடியரசு துணைத் தலைவராக பதவியேற்றார் ஜெகதீப் தன்கர்...!


அப்போது அதனை தடுக்க தனது மனைவியை கடுமையாக தாக்கிவிட்டு அவர் அணிந்திருந்த செயின் உள்ளிட்ட தங்க நகைகளை பறித்துக்கொண்டு அங்கிருந்து மகனை அடித்து சித்ரவதை செய்து, காரைக்காலில் உள்ள தனியார் காப்பகத்தில் கட்டி வைத்து போதை மாத்திரை கொடுத்து கொடூரமாக தாக்கியதாக சொல்லப்படுகிறது. அங்கிருந்து தப்பித்து காரைக்காலில் உள்ள காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த மதனை, தாய் மற்றும் உறவினர்கள் மூலம் பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அங்கிருந்து காரைக்கால் சென்று மகனை மீட்டு வந்து சீர்காழி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். 




ABP Nadu Exclusive: 'தமிழை விரும்புபவர்கள் அறிவியலை நேசிப்பார்கள்' - சி.எஸ்.ஐ.ஆர்., தலைமை இயக்குநர் பேட்டி


மேலும் இது தொடர்பாக பூம்புகார் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், பூம்புகார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யாமல் சமாதானம் செய்து கொள்ளும்படி வற்புறுத்துவதால், பாதிக்கப்பட்ட ராஜேந்திரனின் மனைவி சுதா மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளனர். சொந்த மகனே தந்தை காரில் கடத்திய சம்பவம் மயிலாடுதுறை மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.




மயிலாடுதுறையில் சீவல் கம்பெனியில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் எரிந்து சேதம்!


மயிலாடுதுறை கூறைநாடு செம்மங்குளம் தெற்குகரையில் கந்தன், பாண்டிதுரை ஆகியோர் இரும்பு சீட்டால் மேல் கூறை அமைக்கப்பட்ட வாடகை  கட்டிடத்தில் சீவல் கம்பெனி வைத்து நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு திடீரென்று சீவல் பண்டல்கள் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்த மயிலாடுதுறை தீயணைப்புதுறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று தீ மேலும் பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்து தீயை அணைத்தனர். 




இதில் சுமார் 5  லட்சம் ரூபாய் மதிப்பிலான சீவல் பாட்கெட்டுக்கள் உள்ளிட்ட பொருட்கள் எரிந்து சாம்பலானது. இந்த திடீர் தீவிபத்திற்கு மின்கசிவு காரணமா? அல்லது மர்ம நபர்கள் தீவைத்தனரா? என பல்வேறு கோணங்களில் மயிலாடுதுறை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.





மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண