மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் கடந்த நவம்பர் 11, 12 -ம் தேதி பெய்த வரலாறு காணாத கனமழையின் காரணமாக விளை நிலங்களும், வீடுகளும் தண்ணீரில் மூழ்கி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், அதற்காக விவசாயிகள் பயிர் காப்பீட்டுத் தொகை செலுத்தி இருந்தும் தற்பொழுது கனமழையால் பாதிக்கப்பட்ட சீர்காழி தாலுகாவில் 17 கிராமங்களும், தரங்கம்பாடி தாலுகாவில் 51 கிராமங்களும் பயிர் காப்பீடு தொகை வழங்காமல் புறக்கணிக்கப்பட்டுள்ளது. 




இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பாக பயிர் காப்பீட்டு தொகை வழங்க கோரி கண்டன கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நட்பாண்டுக்குரிய காப்பீடுகளுக்கு ஆணையில் அனைவருக்கும் காப்பீடு தொகை வழங்கிட வேண்டும், மயிலாடுதுறை மாவட்டத்தில் தமிழக அரசு அறிவிக்கப்பட்ட பாதிக்கப்பட்ட சீர்காழி, தரங்கம்பாடி தாலுக்கா அனைத்து விவசாயிகளும் காப்பீட்டு வழங்கிட வேண்டும், காப்பீடு துறையில் அறிவித்துள்ள வருவாய் கிராமங்கள் கொள்ளிடம் 43 , சீர்காழி 29, செம்பனார்கோவில் 15, ஆகிய வருவாய் கிராமங்களுக்கு மட்டும் அறிவித்திருப்பது ஏமாற்றம் அளித்துள்ளது. சீர்காழி, தரங்கம்பாடி இரண்டு தாலுக்காவில் அனைத்து வருவாய் கிராமங்களில் உள்ள விவசாயிகளுக்கு விடுபடாமல் காப்பீட்டு வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




மயிலாடுதுறையில் தமிழ்நாடு ஆளுநர் பதவி விலகக் கோரி காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


மயிலாடுதுறை பழைய பேருந்து நிலையம் அருகில் தமிழ்நாடு ஆளுநரை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மயிங சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். 





தொடர்ந்து சட்டத்திற்கு புறம்பாகவும் , மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு மற்றும் தமிழ்நாடு மக்களுக்கு விரோதமாகவும் செயல்படக்கூடிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.ஏன்.ரவியை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழக ஆளுநர் உடனடியாக பதவி விலக கோரி கோஷங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.




மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கௌரவ விரிவுரையாளர்கள் வாயில் முழக்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.  


மயிலாடுதுறை தருமபுரம் ஞானாம்பிகை அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரி கௌரவ விரிவுரையாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கொரவ விரிவுரையாளர்கள்  பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி  வாயில் முழக்க ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர். 




இதில் பொறுப்பாளர் கனிமொழி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் அனைத்து கௌரவ விரிவுரையாளர்களையும் பணி நிரந்தரம் செய்ய கோரியும், சம வேலைக்கு தகுந்தாற்போல் சம ஊதியத்தை வழங்கிட வலியுறுத்தியும், யுஜிசியில் தகுதி பெறுவதற்கு அவகாசம் கொடுக்க வேண்டும், அரசாணை 56 -ஐ நிறைவேற்ற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 




தருமபுரம் ஞானாம்பிகை கல்லூரி வாயிலில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்று தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். மேலும், வருகின்ற திங்கட்கிழமை முதல் கல்லூரியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட இருப்பதாக அறிவித்துள்ளனர்.