மயிலாடுதுறை மாவட்டத்தில் தாளடி மற்றும் சம்பா நெல் அறுவடை பணி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய நான்கு தாலுகாக்களில் சுமார் 1.70 ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் இந்தாண்டு பயிரிடப்பட்டிருந்தது. நிலத்தடி நீர் அது மட்டும் இன்றி மேட்டூர் அணையில் உரிய நேரத்தில் திறக்கப்பட்ட காவிரி நீர் என தண்ணீர் கை கொடுத்ததன் விளைவாக மாவட்டம் முழுவதும் அதிக அளவில் சம்பா தாளடி பயிர் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், கடந்த நவம்பர் மாதம் 11-ஆம் தேதி வடகிழக்கு பருவ மழை தீவிர தாக்கத்தால் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி தாலுகாக்களில் 50 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிர் மழைநீரில் முழுவதும் மூழ்கி சேதம் ஆனது. அதற்கு அரசு இடுபொருள் நிவாரணமாக ஹெக்டேருக்கு 13,500 ரூபாயும், இன்சூரன்ஸ் தொகையும் வழங்கியுள்ளது. விவசாயம் பாதிக்கப்பட்ட பல்வேறு இடங்களில் மீண்டும் நேரடி நெல் விதைப்பு மற்றும் நாற்று நடவும் செய்யப்பட்டிருந்தது. மாவட்டத்தில் அதிகபட்சமாக 1.70 ஏக்கரில் சம்பா மற்றும் தாளடி பயிர் செய்யப்பட்டு தற்பொழுது அறுவடைக்கு தயாராக உள்ளது. மேலும் குத்தாலம் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த இரண்டு தினங்களாக அறுவடை பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
நவீன அறுவடை இயந்திரங்கள் மூலம் விவசாயிகள் அறுவடைபணி ஈடுப்பட்டுள்ளனர். வேளாண் துறையில் போதிய நெல் அறுவடை இயந்திரம் இல்லாததால் விவசாயிகள் தனியார் இயந்திரத்தை நாடும் சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனால் மணிக்கு 2 ஆயிரத்து 450 ரூபாய் என்ற அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் செலுத்தி அறுவடை செய்யும் சூழலுக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். இந்த அறுவடை இயந்திர தட்டுப்பாட்டை போக்க அரசு பிற மாவட்டங்களில் இருந்து தங்களுக்கு வேளாண் துறை மூலம் அறுவடை இயந்திரங்களை வரவழைத்து, இயந்திர தட்டுப்பாடு இல்லாமலும், கட்டணம் கேட்கும் தனியார் இயந்திரங்களை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சூழலில் அறுவடை செய்த நெல்லை தமிழக அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மூலம் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் விற்பனைசெய்ய விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இது குறித்து மாவட்ட ஆட்சியர் லலிதா கூறுகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் விவசாயிகளின் கோரிக்கைக்கு ஏற்ப இதுவரை 150 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், விவசாயிகள் எவ்வித தங்கு தடையின்றி தங்கள் நெல்லை கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.
Thai amavasai: நாளை சாபம் நீக்கும் தை அமாவாசை... எப்படி, எந்த நேரத்தில் தர்ப்பணம் செய்ய வேண்டும்...?