இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியதின் பேரில், தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒருங்கினானந்த வரைவு வாக்காளர் பட்டியல் மற்றும் அக்டோபர் 2021 வரை பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் பெயர் சேர்க்கப்பட்டு உரிய திருத்தங்கள் மற்றும் நீக்கம் ஆகியவை மேற்கொள்ளப்பட்டு வரைவு வாக்காளர் பட்டியலை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் வெளியிட்டார். தேர்தல் ஆணையத்தால், வெளியிடப்பட்டுள்ள வரைவு வாக்காளர் பட்டியலின்படி தஞ்சாவூர் மாவட்டத்தில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 10,04,103 பேர், பெண் வாக்காண்கள் எண்ணிக்கை 10,60,560 பேர், இதர பாலினத்தவர்கள் 157 பேர் உள்ளார்கள். மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 20,64,820 ஆகும்.
திருவிடைமருதூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,28,832 பேர்,. பெண் வாக்காளர்கள் 1,31,175 மூன்றாம் பாலினத்தவர் 14 என மொத்த 2,60,021 வாக்காளர்கள் உள்ளனர்.
கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,33,491 பேர், பெண் வாக்காளர்கள் 1,40,238 பேர், மூன்றாம் பாலினத்தன் 15 பேர் என மொத்தம் 2,73,74 வாக்காளர்கள் உள்ளனர்.
பாபநாசம் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1.27,506 பேர் பெண் வாக்காளர்கள் 1,33,751 பேர், மூன்றாம் பாலினத்தவர் 16 பேர் என மொத்தம் 2,61,273 வாக்காளர்கள் உள்ளனர்.
திருவையாறு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,30,744 பேர், பெண் வாக்காளர்கள் 1,37,897 பேர், மூன்றாம் பாலினத்தவர் 18 பேர் என மொத்தம் 2,68,659 வாக்காளர்கள் உள்ளனர்
தஞ்சாவூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,39,011 பேர், பெண் வாக்காளர்கள் 1,51,819 பேர். முன்றாம் பாலினத்தவர் 58 பேர் என மொத்தம் 2,90,868 வாக்காளர்கள் உள்ளனர்.
ஒரத்தநாடு சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,407 பேர், பெண் வாக்காளர்கள் 1,25,282 பேர், மூன்றாம் பாலினத்தவர் 2 பேர் என மொத்தம் 243,691 வாக்காளர்கள் உள்ளனர்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,18,037 பேர், பெண் வாக்காளர்கள் 1,28,201 பேர், மூன்றாம் பாலிளத்தவர் 24 பேர் ஆக கூடுதல் 2,46,262 வாக்காளர்கள்.
பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,08,075 பேர், பெண் வாக்காளர்கள் 1,12,197 பேர், மூன்றாம் பாலினத்தவர் 10 பேர் என மொத்தம் 2,20,282 வாக்காளர்கள் உள்ளனர்.
கடந்த 19.03.2021 முதல் 28.10.2021 அரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பித்தவர்களில் தகுதியான நபர்களின் படிவங்கள் ஏற்கப்பட்டு 5030 நபர்களின் பெயர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் இறந்த, இடம்பெயர்ந்த வாக்காளர்கள் 2077 நபர்களின் பெயர்கள் விசாரணை அடிப்படையில் நீக்கப்பட்டுள்ளது தஞ்சாவூர் மாவட்டத்தில் 19.03.2021 அன்று வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலை விட தற்போது 2953 வாக்காளர்கள் கூடுதலாக இடம்பெற்றுள்ளனர்.
வரைவு வாக்காளர் பட்டியலின் நகல், தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அனைத்து வாக்குச்சாவடிகள் மற்றும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும், மாநகராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும் பொது மக்கனின் பார்வைக்காக வருகிற 30.11.2021 வரை வைக்கப்படும். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள பொதுமக்கள் இவ்வாய்ப்பினைப் பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் பிழையின்றி இடம் பெற்றுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலீவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
1.1.2004 அன்றோ அல்லது அதற்கு முன்போ பிறந்த தகுதியுடைய மற்றும் வாக்காளர் பட்டியிலில் இடம் பெறாமல் உள்ளார்கள், தங்கள் பெயரை வாக்காளர் பட்டிவயலில் சேர்த்திட படிவத்தை அந்தந்த வாக்குச்சாவடிகளில் பெற்று, பூர்த்தி செய்து அதனுடன் வலது மற்றும் இருப்பிடத்திற்கு ஆதார் எண் நகலை இணைந்து தங்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்தினை படிவத்தில் ஒட்டி அந்தந்த வாக்குச்சாவடி நிலை அலுவரிடம் வழங்கலாம். வாக்காள பட்டியலின் தங்கள் பெயர், முகவரி இவற்றில் ஏதேனும் பிழைவிருப்பின் படிவம் எண் 8 பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். வாக்காளர் பட்டியிலில் ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் பெயர் இடம் பெற்றுள்ள வாக்கரளர்கள் படிவம் எண் 7 அளிக்கலாம், ஒரே சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதியில் குடிபெயர்ந்த வாக்காளர்கள் படிவம் பெற்று பூர்த்தி செய்து முகவரி மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலம் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளலாம்.
மேலும், இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளவாறு. சிறப்பு முகாம்கள் 13.11.2021, 14.11.2021, 27.11.2021 மற்றும் 28.11.2021 ஆகிய தினங்களில் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நடைபெறும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள பொது மக்கள் இவ்வாய்ப்பினை பயன்படுத்தில் மேற்குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் முகவரி மாற்றம் மற்றும் அனைத்து வகை திருத்தம் போன்றவற்றிற்கு விண்ணப்பம் செய்திடலாம்..
வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 2022 தொடர்பான பணிகள் 1.11.2021 முதல் 30.11.2021 வரை தொடர்ந்து செயல்படுத்தப்பட உள்ளதால், தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த வாக்காளர்கள் தங்கள் பகுதிகளில் தேர்தல் தொடர்பான பணிகளை மேற்கொள்ளும் அலுவலர்களுக்கு உரிய ஒத்துழைப்பு வழங்கி, இறுதி வாக்காளர் பட்டியல் 5.1.2022 அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் வெளியிட உரிய ஒத்துழைப்பு மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.