ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்த மத்திய அரசை கண்டித்து நாகை மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற ரயில் மறியல் போராட்டத்தில் 50 பேரை போலீசார் கைது செய்தனர்.

 


ராகுல்காந்தி எம்பி பதவியை தகுதி நீக்கம் செய்த ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை மாவட்டத்தில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சி நாகை மாவட்ட தலைவர் அமிர்தராஜா தலைமையில் கீழ்வேளூர் அருகே அத்திபுலியூரில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற மாவட்டத் தலைவர் அமுலு ராஜா உள்ளிட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.



 

இதை தொடர்ந்து திருச்சியில் இருந்து காரைக்கால் நோக்கி வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயிலை திருகண்ணங்குடி ரயில்வே கேட் அருகே மறித்தவர்களை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து  அந்தனபேட்டையில் சரக்கு ரயிலை மறித்தவர்களை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் கைது செய்தனர். மேலும்  வெளிப்பாளையம் உட்பட பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதில் 50 பேரை போலீசார் கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபங்களில் தங்க வைத்தனர்.



 



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண