தஞ்சாவூர் மாவட்டம்  வடக்குமாங்குடி பகுதியை சேர்ந்தவர் ஹாஜ மொய்தின்(52). இவர் சிதம்பரம் பகுதியில் இடம் வாங்கியது சம்பந்தமாக அடிக்கடி  பிரச்சனை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஹாஜாமொய்தீனை சென்னை நீலாங்கரைக்கு கடத்திச் சென்று அடைத்து வைத்து ஒரு சில நபர்கள் துன்புறுத்தி கொலை மிரட்டல் விடுத்து வருவதாக குமார் என்பவர் சென்னை நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். 

 



 

இதனை அடுத்து நீலாங்கரை காவல்துறையினர் ஹாஜ மொய்தினை பத்திரமாக மீட்டனர். அவரை கடத்திய கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் வா.கா. செல்லப்பன், விஜயபாஸ்கர், ஜமால் மைதீன்,முகமது ரபீக், மற்றும் கார் ஓட்டுநர் ரவீந்திரன் உள்ளிட்டோரை கைது செய்து சிதம்பரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். 

 

இதனைத் தொடர்ந்து, ஆள் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டவர் மீது  சிதம்பரம் காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அவரை நீதிமன்றத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

 

தஞ்சாவூர் வடக்கு மாங்குடி பகுதியை சேர்ந்தவர் ஹாஜாமைதீன். இவர் சிதம்பரம் பகுதியில் ஜமால் மைதீன் என்பவரிடம் நிலம் வாங்கியுள்ளார். வாங்கிய சிறிது காலத்தில் நிலத்தை ஜமால் மைதீனிடம் ஒப்படைத்துவிட்டு அதிலிருந்து வரும் வருமானத்தை மாத மாதம்  தனக்கு அனுப்பும்படி கூறிவிட்டு அயல்நாடு சென்றுவிட்டார். 


 

இந்நிலையில், சிறிது காலத்திற்கு அதிலிருந்து வந்த வருமானத்தை ஹாஜாமைதீனிடம் ஜமால் மைதீன் அனுப்பி வைத்துள்ளார். கடந்த சில மாதங்களாக பணத்தை  அனுப்பாததால் ஹாஜா மைதீன் சிதம்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

 

இந்நிலையில் விசாரணைக்கு ஆஜராகாமல் ஜமால் மைதீன் சிதம்பரம் பகுதி விடுதலை சிறுத்தைகள் கட்சி பிரமுகர் வா.கா செல்லப்பனிடம் தெரிவித்துள்ளார். அப்பொழுது ஹாஜமொய்தினை அவர்கள் கடத்திச் சென்று நீலாங்கரை பகுதியில் அரையில் வைத்து துன்புறுத்தி கொலை மிரட்டல் செய்தது காவல்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

 

ஆள் கடத்தும் சம்பவத்தில் ஈடுபட்ட மேலும் ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். இது தொடர்பாக ஆறு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.