மயிலாடுதுறை மாவட்ட மீனவர் மீது இந்திய கடற்படை துப்பாக்கி சூட்டை கண்டித்து நாளை நாகை தலைமை தபால் நிலையம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட போவதாக மீனவ பஞ்சாயத்து நகர் பல்வேறு பகுதியில் சுவரொட்டி ஒட்டி உள்ளனர்.

 

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியை சேர்ந்த செல்வம் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் காரைக்கால், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களை சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த மாதம் 15-ந் மீன்பிடிக்க தேதி கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். இவர்கள் 21-ந் தேதி நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படையினர் துப்பாக்கி சூடு நடத்தினர்.

 



 

இதுதொடர்பாக வேதாரண்யம் கடலோர காவல் குழும போலீசார் 4 பிரிவுகளின்  கீழ் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்திய கடற்படை கமாண்டர் விஷால் குப்தா தலைமையிலான அதிகாரிகள் கடந்த மாதம் 27-ந் தேதி நாகை துறைமுகத்திற்கு வந்து துப்பாக்கி குண்டுகள் தாக்கிய விசைப்படகை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். நாகை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மீதம் உள்ள 9 மீனவர்களிடம் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மீனவர் மீது துப்பாக்கி சூடு நடத்திய இந்திய கடற்படையினரை கண்டித்து நாகை, காரைக்கால், மயிலாடுதுறை உள்ளிட்ட 7 மாவட்ட மீனவர்கள் நாளை நாகை தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள்  போராட்டம் நடத்த உள்ளதாக நாகை உள்ளிட்ட பல்வேறு மீனவர் கிராமங்களில் மீனவ கிராம பஞ்சாயத்து சார்பாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.