தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை சேர்ந்த மேகவேலு, விஜியக்குமார், செந்தில்குமார் ஆகிய மூவரும் நண்பர்கள், கடந்த 5 ஆம் தேதியன்று தெல்லனஅள்ளி என்ற இடத்தில், அந்த வழியாக சென்ற வாகனம் ஒன்று மோதிவிட்டு சென்றதில் மேகவேலு காயமடைந்துவிட்டதாக கூறி, தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கபட்டிருந்தார். இந்த நிலையில்  சிகிச்சையளித்தும் பலனலளிக்காமல் கடந்த 22 ஆம் தேதி மருத்துவமனையிலயே மேகவேலு உயிரிழந்தார்.

 



 

தொடர்ந்து வாகன விபத்தாக இருக்குமோ என்ற கோணத்தில் காவல் துறையினர் முதலில் விசாரணையை தொடங்கியிருந்தனர். இந்நிலையில் காரிமங்கலம் காவல் துறையினர், இந்த விபத்து சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடைபெற்ற இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும் விபத்து ஏற்படுத்திய லாரியை அடையாளம் கான அப்பகுதியில் இருந்த ஒரு சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். ஆனால் அந்த வீடியோவில் மேகவேலுவை, லாரி வரும்போது நண்பர்களே சாலையில் பிடித்து தள்ளுவதும், அந்த வழியாக வந்த சரக்கு வாகனம் மேகவேலு தலை மீது ஏறிச் செல்லும் காட்சி பதிவாகி இருந்தது.  

 



 

தொடர்ந்து கிடைத்த சிசிடிவி பதிவு  இந்த வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காவல் துறையினர், மேகவேலுவின் நண்பர்களை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில், நண்பர்கள் மூவரும் குடி போதையில் ஒருவருக்கொருவர் தகராறில் ஈடுபட்டபட்டதும், அப்போது மேகவேலுவை பிடித்து கீழே தள்ளூம்போது, அந்த வழியாக சென்ற சரக்கு வாகனம் ஒன்று,  மேகவேலு மீது, எதிர்பாராத விதமாக ஏறியது. இந்த  வாகனம் மேகவேலு தலை மீது ஏறியதில் பலத்த காயமடைந்துள்ளார். 

 



 

இதனை தொடர்ந்து உண்மையை தெரிவித்தால் சிக்கி கொள்வோம் என்பற்காக உடனிருந்த நண்பர்கள் இருவரும் நடந்த சம்பவத்தை மூடி மறைத்து, வாகனம் ஒன்று மோதிவிட்டு சென்றதாக நாடகமாடியது  விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதனை தொடர்ந்து  மேகவேலுவை தள்ளிவிட்டு கொலை செய்து, தப்பிக்க விபத்து என நாடகமாடிய  விஜியகுமார், செந்தில்குமார், ஆகிய இருவரை காரிமங்கலம் காவல் துறையினர் கைது செய்தனர். தற்போது மேகவேலுவை குடிபோதயில் ஏற்பட்ட தகராறில், நண்பர்களே சாலையில் பிடித்து கீழே தள்ளுவதும், சாக்கு தலை மீது ஏறிச் செல்லுகின்ற, நெஞ்சை பதற வைக்கும் சிசிடிவியில் பதிவான நேரடிக் காட்சிகள் வெளியாகியுள்ளது. குடிபோதயில் சாலையில் தள்ளிவிட்டு, கொலை செய்துவிட்டு சாலை விபத்து என நாடகமாடிய நண்பர்களை சிசிடிவி  காட்சிகள் காட்டி கொடுத்தது குறிப்பிடத்தக்கது.