தமிழகத்தில் உள்ள பல்வேறு கோயில்களில் பங்குனி உற்சவ திருவிழா களைக்கட்டி வருகிறது. தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவ காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கோவில்களில் எந்த ஒரு திருவிழாக்களும் நடைபெறாமல் இருந்து வந்தது. ஒரு சில கோயில்களில் மட்டும், பக்தர்களுக்கும் பொது மக்களுக்கும் அனுமதியின்றி கோயில் நிர்வாகிகள் மட்டும் கலந்து கொண்டு நடத்தி வந்தனர்.
கிரிக்கெட் விளையாட பந்து எடுத்து செல்வதாக கூறி நாட்டு வெடிகுண்டுகளுடன் சுற்றி திரிந்த ரவுடி கைது
இந்நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் குறைந்து, கொரோனா கட்டுப்பாடுகள் முழுவதும் திரும்ப பெறப்பட்டுள்ளது. இதனால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களிலும் இந்த ஆண்டு விழா களை கட்ட தொடங்கியுள்ளது. மயிலாடுதுறை அருகே தருமபுரம் ஆதீனத்துக்கு சொந்தமான மணக்குடி நல்லநாயகி அம்மன் திருக்கோவிலில், இந்த ஆண்டு பங்குனி உற்சவம் கடந்த மார்ச் 29 ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
மது அருந்தும்போது தகராறு...! வீட்டை பிரிந்து இறங்கி நண்பனை கொன்றவருக்கு இரட்டை ஆயுள்
தொடர்ந்து தினந்தோறும் அம்மன் வீதிஉலா நடைபெற்று வந்த நிலையில், விழாவின் முக்கிய நிகழ்வுகளான நல்லநாயகி அம்மன் நாக பல்லாக்கில் வீதி உலா கடந்த 3-ஆம் தேதி விமரிசையாக நடைபெற்றது. மேலும் விழாவின் மற்றொரு முக்கிய உற்வசமான தேரோட்டம் இன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. தேரோட்டத்தை அடுத்து ஸ்ரீ நல்லநாயகி அம்மன் மற்றும் ஸ்ரீ பொறையான் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் இரண்டு தேர்களில் எழுந்தருளச் செய்யப்பட்டனர்.
தொடர்ந்து சுவாமிகளுக்கு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு, கிராம மக்கள் தேர்களை தோள்களில் தூக்கி மணக்குடி மற்றும் அதனைச் சுற்றி உள்ள கிராமங்களுக்கு வீதியுலாவாக சென்று மீண்டும் கோயிலை வந்தடைந்தனர். இதில் மயிலாடுதுறை சுற்றுவட்டார பகுதிகள் மட்டும் இன்றி தமிழகத்தின் நாகை, திருவாரூர், தஞ்சாவூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு மேற்கொண்டனர். பொதுவாக தேரோட்டம் என்பது தேரை வடம் பிடித்து இழுத்து செல்லும் நிகழ்வாகும். ஆனால் இந்த கோவிலில் தேரை வடம் பிடித்து இழுக்காமல் மாறாக பக்தர்கள் தோள்களில் சுமந்து செல்வது விழாவின் கூடுதல் சிறப்பாகும்.