தஞ்சாவூர்: மக்களை பாதிக்கும் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் மின்கட்டணத்தை மாதந்தோறும் கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்ற விலைவாசி உயர்வினால் அன்றாடம் உழைக்கின்ற ஏழை, எளிய நடுத்தர மக்கள் உட்பட அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ள மின் கட்டண உயர்வினால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும் சிறு, குறு தொழில்கள் முனைவோர் உள்பட தொழில்துறைகளும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே உடனடியாக தமிழ்நாடு அரசு நடைமுறைப்படுத்தியுள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். மின் கட்டணத்தை மாதம் தோறும் கணக்கிட்டு வசூல் செய்யும் நடவடிக்கையை தொடங்க வேண்டும், மத்திய அரசு மின்சார சட்ட திருத்தம் 2020 ஐ திரும்ப பெற வேண்டும்.
மின்வினியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, மாநில உரிமைகளை பாதிக்கின்ற உதய் மின் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தஞ்சாவூர் தலைமை அஞ்சலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
தஞ்சை மாநகர செயலாளர் ஆர்.பி.முத்துக்குமரன் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தெற்கு மாவட்ட செயலாளர் முத்துஉத்திராபதி, மாவட்ட துணை செயலாளர் கோ.சக்திவேல், மாவட்ட பொருளாளர் கோ.பாஸ்கர், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் வழக்கறிஞர் சி.சந்திரகுமார், சி.பக்கிரிசாமி, பா.பாலசுந்தரம் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஆர்.இராமச்சந்திரன் மாவட்ட செயலாளர் சோ.பாஸ்கர், விவசாயத் தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் ரெ.கோவிந்தராசு, மாதர் சங்க மாவட்ட செயலாளர் ம.விஜயலட்சுமி, மாவட்ட தலைவர் கண்ணகி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் அ.கலியபெருமாள், வீர மோகன், தி. திருநாவுக்கரசு, ஒன்றிய செயலாளர்கள் பூதலூர் தெற்கு இரா. முகில், பேராவூரணி சி. வீரமணி சேதுவாசத்திரம் வி.தட்சிணாமூர்த்தி, திருவோணம் பால்ராஜ், மதுக்கூர் முத்துராமன், பட்டுக்கோட்டை பூபஷ் குப்தா, ஒரத்தநாடு வாசு இளையராஜா, தஞ்சாவூர் ப.குணசேகரன், பட்டுக்கோட்டை நகரம் சுதாகர், பூதலூர் வடக்கு பிரபாகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கோவிந்தராசு, சுந்தரமூர்த்தி, தாமரைச்செல்வன், மாநகர பொருளாளர் கே.கல்யாணி, ஏஐடியூசி மாவட்ட தலைவர் வெ.சேவையா, மாவட்ட செயலாளர் துரை.மதிவாணன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும், மின் கட்டணத்தை மாதம் தோறும் கணக்கிட்டு வசூல் செய்ய வேண்டும் என்பன போன்ற கோஷங்கள் எழுப்பப்பட்டன.