இந்திய விவசாயிகளின் உரிமைகளை, உள்நாடு, பன்னாட்டு நிறுவனங்களிடம் அடிமைப்படுத்திட நினைத்து, விவசாயிகளின் நலனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் கருப்பு சட்டங்களை, தகர்த்தெறிந்த, தன்னலம் கருதாமல், அர்ப்பணிப்பு உணர்வோடு அமைதி அறவழி போராட்டம் நடைபெற்றது.இப்போராட்டத்தில் ஈடுபட்ட 700 விவசாயிகள் தங்களது இன்னுயிர்களை இழந்தனர். விவசாயிகளுக்கான வீர போராட்டங்களை, ஐக்கிய முன்னணி அமைத்து இந்திய உழவர்கள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவினர், டெல்லியில் சிங்கு, காசிப்பூர்,ஷஹான்ஜன்பூர், திக்ரி, ஆகிய எல்லைகளில் 380 நாட்களாக போராட்டம் நடத்தி உலக வரலாற்றில் புதிய பதிவினைப் படைத்தனர்.
பஞ்சாப், ஹரியானா, உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், இமாச்சலபிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த விவசாய விடுதலை போராளிகள், தமது மனைவி, குழந்தைகள், கால்நடைகள், விட்டு பிரிந்து, இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகளுக்காக, போராடி கடும்பணி, சுட்டெரிக்கும் வெயில், கொட்டும் மழை, கொன்று தீர்த்த கொரோனாபற்றி கவலைப்படாமல். போராட்டம் நடத்தினர்.
அதிமுக கொண்டு வந்த மருத்துவ கல்லூரிகள்...! திமுக சொந்தம் கொண்டாடுவதா? - பொள்ளாச்சி ஜெயராமன் கேள்வி
இப்போராட்டம் வெற்றி பெற்றதையடுத்து, வீரமாகப் போர் நடத்தி வெற்றி வாகை சூடி, அவர்களது சொந்த ஊர் திரும்பும் விவசாயிகளுக்கு, தமிழ்நாட்டு வயல்களில், கழனிகளில் இருந்தபடியே, தஞ்சாவூர் மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்ப சங்கம் சார்பில், ஏராகரம் கிராமத்தில், நடைபெற்ற நிகழ்ச்சியில், நன்றி பெருக்கை மகிழ்ச்சியையும், வீர வணக்கங்களையும் தெரிவித்தனர். இதில் விவசாயிகள், தேசியக் கொடியை கையில் ஏந்தி, உழவு இயந்திரங்களை இயக்கி, டெல்லி காசீப்பூர் எல்லையில் இருந்து 2021 குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராகட்ர் பேரணி போராட்டத்தில், பங்கேற்று, சிந்து எல்லையில் 28.11.2011 முதல் 4.12.2021 வரை போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகளான ஆதி கலியபெருமாள், இளங்கோ, இளவரசன், ஐயாரப்பன், சுந்தரவிமலநாதன் ஆகியோருக்கு நன்றி செலுத்தும் விதமாக இனிப்புகளையும், பழங்களையும் வழங்கினர்.
7 மாதங்களுக்குள் 551 கோயில்களுக்கு குடமுழுக்கு - இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு
யானைகள் வழித்தடத்தை ஈஷா யோகா மையம் ஆக்கிரமிக்கவில்லை என பொருள் கொள்வது தவறு - பூவுலகின் நண்பர்கள்
மேலும், டெல்லியில் போராடி வீடு திரும்பும், பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகளுக்கு பாராட்டினையும், நன்றியை, தெரிவிக்கும் வகையில், அமைதிக்காக பயன்படுத்தப்படுவதும், பழங்காலத்து முறையான புறாக்களை பறக்க விடுவது போன்று, 10 வெண்புறாக்களை பறக்க விட்டு, நன்றியை தெரிவித்தனர். தொடர்ந்து, வேளாண் சட்டங்களை திரும்ப பெறக்காரமாக இருந்த விவசாயிகளுக்கு நன்றி தெரிவித்தும், வாழ்த்து கோஷங்களிட்டனர். ’