மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா  கண்டமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த 45 வயதான கூலித்தொழிலாளி  சாமிதுரை. இவரது குடும்பத்தினருக்கும், இவர் வீட்டருகே  வசிக்கும் 42 வயதான சண்முகம் என்பவரது குடும்பத்திற்கும் இடையே ஆடு, மாடு மேய்ப்பது மற்றும் பொதுக் குழாயில் தண்ணீர் பிடிப்பது தொடர்பாக நீண்ட காலமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. 




Ratan Tata: வாவ்.. உலகமே வியக்கும் டாடா.. ரத்தன் டாடாவிடம் இருக்கும் மிக காஸ்ட்லியான விஷயங்கள் இவைதான்..


இந்நிலையில், கடந்த 2020 ஆம் ஆண்டு ஜனவரி 3 ஆம் தேதி முன்விரோதம் காரணமாக சாமிதுரைக்கும், சண்முகத்திற்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் சமாதானம் செய்து வைத்துள்ளனர். ஆனால் இந்த பிரச்சினையில் ஆத்திரம் அடங்காத சண்முகம் கும்பத்தினர் இரவு தனியாக நின்றிருந்த சாமிதுரையை, சண்முகம் மற்றும் அவரது மனைவி 37 வயதான ராஜேஸ்வரி  ஆகிய இருவரும் சேர்ந்து கட்டையால் கடுமையாக தாக்கி,  கத்தரிக்கோலால் குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த சாமிதுரை சம்பவம் இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார்.




இதனை அடுத்து தகவல் அறிந்து சம்பவம் இடத்திற்கு விரைந்த பாகசாலை காவல்நிலைய காவலர்கள் சாமிதுரை உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, கொலை வழக்கு பதிவு செய்து சண்முகம் மற்றும் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அதனை தொடர்ந்து இவ்வழக்கு மயிலாடுதுறை கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வந்தது,  அரசு தரப்பில் வக்கீல் ராமசேயோன், சண்முகம் தரப்பிற்கு வக்கீல் கிருஷ்ணமூர்த்தியும் ஆஜராகினர். இருதரப்பு வாதங்களையும் கேட்டு வழக்கை விசாரித்த கூடுதல் மாவட்ட நீதிபதி பன்னீர்செல்வம்  சண்முகம் அவரது மனைவி ராஜேஸ்வரி ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா  1200 ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இது மயிலாடுதுறை மாவட்டம் தனியாக பிரிக்கப்பட்டு வழங்கப்படும் மூன்றாவது ஆயுள் தண்டனை தீர்ப்பு என்பது குறிப்பிடத்தக்கது.




இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆத்திரத்தில் ஒரு நிமிடம் யோசிக்காமல் செய்யும் சிறு  தவறு அது  விபரீதமாகி விடுகிறது என்றும், அதற்கு உதாரணமாக தான் தற்போது இந்த இருவருடைய வாழ்க்கை மாறியுள்ளது என்றும் குறிப்பாக எப்போதும் சற்று நிதானித்து யோசித்து ஒவ்வொரு செயலையும் ஈடுபட வேண்டும் என்றும், வாழ்வு என்பது ஒரு முறைதான், அதனை பாழாகமால் புரிந்து மற்றவர்களுக்கு நன்மை பயக்கும் வகையில் நடந்துகொள்ளவேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.


Chennai Corporation Budget : சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - சென்னை மேயர் பிரியா அறிவிப்பு