திருவாரூர் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணியாற்றும் ஆட்சியரின் நேர்முக உதவியாளர்கள் இருவர்,  கணினி உதவியாளர் ஒருவர், டிரைவர் உள்ளிட்ட 8 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. 



 

இந்த நிலையில் மேலும் 5 நபர்களுக்கு என்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு தினங்களில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியரின் வீட்டில் பணியாற்றிய 13 நபர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக்குழுவின் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனையடுத்து மாவட்ட ஆட்சியரின் உதவியாளர்கள் ஆட்சியர் அலுவலகத்திலும் பணியாற்றி வருவதால் ஏராளமான பொதுமக்கள் மட்டுமின்றி அரசு அலுவலர்களும் தினத்தோறும் சந்தித்து வருவதால் கடந்த 2 நாட்களில் யார், யார் சந்தித்தார்கள் என பட்டியலிடப்பட்டு, அவர்கள் அனைவரையும் நோய் தொற்றுக்கான பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டு வருகிறது.




 


திருக்குவளை அருகே திடுக்கென்று இடிந்து விழுந்த வெள்ளையாற்று பாலம்


மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கம், ஆட்சியர் அறை, ஆட்சியர் நேர்முக உதவியாளர் அறை, விடியோ கான்பரசிங் அறை உள்ளிட்ட பகுதிகளில் நகராட்சி பணியாளர்களை கொண்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. ஆட்சியர் முகாம் அலுவலகத்தில் பணி புரிந்தவர்களுக்கு கொரோனா நோய் தொற்று ஏற்பட்டுள்ளதால் அரசு அலுவலர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தன்னுடன் இணைந்து பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து மாவட்ட ஆட்சியர் தனது வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.