தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபையின் மூலம், தமிழகம் முழுவதும் 200க்கும் மேற்பட்ட

  சர்ச்சுகள், பள்ளிகள்,  40 சிறுவர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் காப்பகங்கள், நான்கு கண் மருத்துவமனைகள், பொறையாறில் ஒரு கலை கல்லுாரி செயல்பட்டு வருகிறது. இந்த திருச்சபையின் 13 ஆவது பிஷப்பாக கடந்த 2019ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி முதல் டேனியல் ஜெயராஜ் இருந்து வருகிறார். இந்நிலையில், டேனியல் ஜெயராஜிற்கு 65 வயது நிரம்பியதையடுத்து, இவரது பணிக்காலம் கடந்த 2020 மார்ச் 5 ஆம் தேதியுடன் முடிந்தது. ஆனால், திருச்சபை ஆட்சிமன்றத்தை சட்டத்திற்கு புறம்பாக திடீரென கலைந்துள்ளார். தொடர்ந்து பிஷப்பாக செயல்பட்டு வருகிறார். இது தொடர்பாக ஆட்சிமன்ற சர்ச் ஊழியர்கள் நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.




இதற்கிடையில், பிஷப் டேனியல் ஜெயராஜ் தனது அதிகாரத்திற்குட்பட்ட திருச்சபையின் கீழ் செயல்படும் பள்ளிளுக்கு பல்வேறு நபர்களிடம் லட்சக்கணக்கில் பணம் பெற்று கொண்டு ஆசிரியர்,  தலைமையசிரியர் பணிகளை நிரப்பியுள்ளார். அதனை தொடர்ந்து, தஞ்சாவூரில் உள்ள கிறிஸ்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஹோமவதி என்பவரிடம் 34 லட்சம் பணம் பெற்று கொண்டு ஆசிரியை பணி நியமனம் செய்துள்ளார். இது குறித்து கேட்ட தாளாளர் ரவிந்தீரனை சஸ்பெண்ட் செய்து விட்டு, தனக்கு வேண்டிய பெஞ்சமின் ஜெயராஜை தாளராகவும், அனிதா பிரமிளபூரணியை தலைமையாசிரியராகவும் நியமித்துள்ளார்.



ஆனால் பிஷப்பாக இருக்கும் டேனியல் ஜெயராஜ், தன்னுடைய பதவியை விட்டு விலகாமல், அலுவலகத்தை விட்டு வெளியேறாமல், பிஷப்பாக தான் இருப்பேன் என திருச்சியிலுள்ள அலுவலகத்தை விட்டு வெளியில் வரமறுக்கின்றார். இதற்காக சபையின் உள்ளே அடியாட்களை வைத்துள்ளார். இவர் இது வரை சுமார் 25 கோடிக்கு மேல் முறைகேடாக பணத்தை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து முதன்மை கல்வி அலுவலரிடமும் புகார் வழங்கப்பட்டு, தற்போது கிடப்பில் போடப்பட்டுள்ளது.




எனவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடனடியாக, திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கும் டிஈஎல்சி எனும் தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபை, ஆட்சி மன்றத்திற்கு புறம்பாகவும், பலவேறு பணிக்கான நியமனங்களில் பல கோடி ரூபாய் பணத்தை பெற்றுள்ளது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சிமன்ற குழுவினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து திண்டுக்கல் திருச்சபையின் தலைவர் பிளாட்டோ, திருச்சி திருச்சபையை சேர்ந்த பொருளாளர்  தெய்வீகன், உறுப்பினர் ஆனந்த ஆகியோர் நேற்று நிருபர்களிடம் கூறுகையில்,


இந்துவாக இருந்த ஹோமவதி என்பவருக்கு, திருச்சபை சட்டத்தினை மீறி, அவரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ஒரே நாளில் கிறிஸ்து பெண்ணாக மதம் மாற்றி செய்து, ஆசிரியை பணிக்காக 34 லட்சம் பணம் வாங்கி கொண்டு நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்து கேட்ட கிறிஸ்து பெண்கள் மேல்நிலைப்பள்ளி தாளாராக இருந்தவரை, பிஷப்பாக இருக்கும் டேனியல்ஜெயராஜ் நீக்கம் செய்து, இவருக்கு ஆதரவானவர்களை தாளாளராகவும், தலைமையாசிரியராகவும் பணியில் அமர்த்தி வைத்துள்ளார். இது குறித்து சி.இ.விடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. கல்வித்துறை பெண் அதிகாரி, (அப்போது, தஞ்சாவூர் மாவட்ட கல்வி அலுவலரை கொச்சையான வார்த்தைகளை கூறி) 50 ஆயிரம் பண லஞ்சமாக பெற்று கொண்டு அவர்களுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றார்கள்.


தற்போது நியமிக்கப்பட்டுள்ள பள்ளி தலைமையாசிரியையின் செயல்பாட்டால், துர்காதேவி என்ற  மாணவி பள்ளிக்கு முறையாக வந்தும், அவர் வரவில்லை 12ஆம் வகுப்பு செல்ல முடியாது என கூறியதால், அந்த மாணவி தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும், பள்ளியில் மாணவர்களிடம் பல்வேறு பெயரில் நிதி வசூல், தகாத வார்த்தைகளால் திட்டுவது, பெண்களிடம் பேசுவது போன்ற செயல்கள் நடக்கிறது. இதற்கு தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வரை  பிஷப்பாக இருக்கும் டேனியல் ஜெயராஜ், சுமார் 25 கோடி வரை முறைகேடாக பணத்தை பெற்றுள்ளார் என தெரியவருகிறது.


திருச்சியில் தலைமையிடமாக செயல்பட்டு வரும் டிஈஎல்சி எனும் தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபையின் கீழ் தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, அந்தமான், பாண்டிச்சேரி, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களிலுள்ள சபைகள் உள்ளன. இதில் பிஷப் பணிக்காலம் முடிந்து, சட்டத்திற்கு புறம்பாக, பிஷப்பாக இருந்து வருவதை அனைவரும் எதிர்க்கின்றனர். இந்த சபையின் மொத்த மதிப்பு 15 ஆயிரம் கோடிகளாகும். எனவே, தமிழக முதல்வர் முக.ஸ்டாலின், டிஈஎல்சி எனும் தமிழ் சுவிஷேச லுத்திரன் திருச்சபையின் மொத்த மதிப்புள்ள 15 ஆயிரம் கோடி சொத்துக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.