திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோயிலில் அகோர மூர்த்தி விழாவினை முன்னிட்டு தமிழக முதல்வர் ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் பால்குடம் எடுத்து வழிபாடு நடத்தினார்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்து திருவெண்காடில் அமைந்துள்ளது இந்து சமய அறநிலையத் துறைக்கு சொந்தமான பிரம்ம வித்யாம்பிகை சமேத  சுவேதாரண்யேசுவரர் திருக்கோயில். சமய குரவர்களாகிய சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயம் இதுவாகும். இது சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள தேவாரப் பாடல் பெற்ற தலமாகும். மேலும் புதனுக்கு உரிய தலமாக கருதப்படுகிறது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது நம்பிக்கை. தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11 வது சிவத்தலமாகும். 


MP Election Result 2023: மத்திய பிரதேசத்தில் பாஜக அசுர வெற்றி..! காங்கிரஸ் நிலை?




இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் சிவ பெருமான் அகோரமூர்த்தியும், ஆதி நடராஜர் தனி சன்னதியிலும் எழுந்தருளியுள்ளனர். நவகிரக ஸ்தலங்களில் புதன் ஸ்தலமாகவும்  உள்ளது. இக்கோயிலில் உள்ள சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம், அக்னி தீர்த்தம் ஆகிய மூன்று குளங்களில் புனிதநீராடி சுவாமி, அம்பாளை வழிபட்டால் ஞானம், குழந்தை பாக்கியம் கிடைப்பதுடன், எம பயம் நீங்கும் என்பது ஐதீகம். இத்தகைய பல்வேறு சிறப்பு மிக்க இக்கோயில் சிவபெருமானின் அம்சமான அகோரமூர்த்தி தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். அகோர மூர்த்திக்கு ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் சிறப்பு வழிபாடு நடைபெறுவது வழக்கம்.


Rajasthan Election Result 2023: ராஜஸ்தானில் ஆட்சியை இழக்கும் காங்கிரஸ்... பாஜகவிற்கு ஏறுமுகம்..!




இதில் கார்த்திகை மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வாய்ந்தது. இத்திருநாளில் பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் செய்து வழிபாடு நடத்துவது வழக்கம். இத்தகைய சிறப்புமிக்க அகோர மூர்த்தி திருநாளான நேற்று மாலை கோயிலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மனைவி துர்கா ஸ்டாலின் வருகை தந்தார். அவருக்கு  கோயிலில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டதை தொடர்ந்து கோயில் உள்ள சூரிய தீர்த்த குளத்தில் இருந்து பால்குடம் எடுத்து கோயிலை வளம் வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிப்பட்டார்.  தொடர்ந்து  துர்கா ஸ்டாலின் சுவாமி அம்பாள் மற்றும் புதன் பகவான் சன்னதிகளுக்கு சென்று வழிபாடு நடத்தினார்.


BJP in South India: தெற்கில் மெல்லக் காலூன்றும் பாஜக; தெலங்கானாவில் அப்போது 1, இப்போது 8 தொகுதிகள்!




பூஜைகளை பாபு குருக்கள் தலைமையிலானோர் செய்து வைத்தனர். இந்நிகழ்ச்சியில் துர்கா ஸ்டாலின் உறவினர்கள் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மோகனசுந்தரம், செயல் அலுவலர் முருகன் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். துர்கா ஸ்டாலின் வருகையை முன்னிட்டு ஏராளமான கோயில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனை அடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் சூரிய தீர்த்தத்தில் இருந்து பால்குடம் எடுத்து வந்து அகோர மூர்த்திக்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர்.


IAF Recruitment 2023: 317 பணியிடங்கள்; இந்திய விமானப்படையில் வேலை - முழு விவரம்!