பட்டியலின ஒதுக்கீட்டை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். 


தஞ்சையில் திராவிடர் கழகம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழா நடைபெற்றது. இஹ்டில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “திராவிட கழகமும், திமுகவும் உயிரும் உணர்வும் போன்றது. தி.கவும் திமுகவும் ஒரு நாணயத்தின் 2 பக்கங்கள் என கருணாநிதி கூறியுள்ளார். திராவிட கழகம், திமுக இடையெயான நட்பும், உறவும் உலகில் வேறு எந்த இயக்கத்திற்கும் இருக்க முடியாது.  திகவும் திமுகவும் இரட்டைகுழல் துப்பாக்கி என அண்ணா ஏற்கெனவே கூறியுள்ளார். கருப்பும் சிவப்பும் போல இணைந்தே இருக்கிறோம். இருப்போம். மக்கள் தொகையை குறைத்தற்காக தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க முயற்சி செய்யப்படுகிறது. பட்டியலின ஒதுக்கீட்டை அழிப்பதே மத்திய அரசின் நோக்கம். குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை சிறப்பாக அமல்படுத்திய தமிழகத்திற்கு தண்டனை தர பார்க்கிறார்கள். இந்தியா கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல; கொள்கை கூட்டணி. தமிழகம் இழந்த உரிமைகளை மீட்பதில் உறுதியாக உள்ளோம். அனைவரது குரலுக்கும் மதிப்பு தரவே இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளோம். தமிழ்நாடு அரசுதான் பெரியார். பெரியார்தான் தமிழ்நாடு அரசு என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


”தி.க.வும், தி.மு.க.வும் இரட்டைக்குழல் துப்பாக்கி என்று அறிஞர் அண்ணா சொன்னார். தி.க.வும், தி.மு.க.வும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள் என்று கருணாநிதி சொன்னார். என்னைப் பொறுத்தவரை தி.க.வும், தி.மு.க.வும் உயிரும், உணர்வும் போன்றது. உயிரும், உணர்வும் இணைந்து உடல் இயங்குவதைப் போல் நாம் நமது இனத்தின் உயர்வுக்காக தொடர்ந்து பாடுபட்டுக்கொண்டிருக்கிறோம். நானும் அதையே வழிமொழிகிறேன். தமிழ்நாடு அனைத்து வகையிலும் முன்னேறிய, தன்னிறைவு பெற்ற மாநிலமாக உயர வேண்டும். இந்திய ஒன்றியத்தின் ஆட்சி கருத்தியலாக கூட்டாட்சி கருத்தியல் மலர வேண்டும். அனைவரின் குரலுக்கும் ஒரே மரியாதையும், மதிப்பும் இருக்க வேண்டும். அத்தகைய கூட்டாட்சி கருத்தியலைக் கொண்ட இந்தியாவை உருவாக்கவே 'INDIA' கூட்டணியை அமைத்துள்ளோம். 'INDIA' கூட்டணி அரசியல் கூட்டணி அல்ல, அது கொள்கை கூட்டணி. தேர்தல் வெற்றியை கருத்தில் கொண்டு இதை நாங்கள் உருவாக்கவில்லை. அந்த வெற்றிக்குப் பிறகு அமையப்போகும் ஆட்சியில் கோலோச்ச வேண்டிய கொள்கைகளை மனதில் வைத்து நாங்கள் செயல்படுகிறோம்." என்று தெரிவித்தார்.




மேலும் வாசிக்க.


சிறையில் இருந்து கொண்டு அமைதிக்கான நோபல் பரிசை வென்றவர்கள் யார்? யார்?


Asian Games 2023 Badminton: வரலாற்றிலே முதன்முறை! ஆசிய விளையாட்டுப் போட்டி பாட்மிண்டனில் இறுதிப்போட்டிக்கு முன்னேறிய இந்தியா!