கடந்த சில நாள்களாக தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில், குறிப்பாக டெல்டா மாவட்டங்களில் பரவலாகப் பெய்து வரும் கனமழையின் காரணமாக பயிர்கள் மழை நீரில் மூழ்கி பெரும் பாதிப்பை அடைந்துள்ளது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை இல்லாத சூழலில், மழை பாதிப்புகள் குறித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டுள்ளார்.





முன்னதாக கடலூர் மாவட்டத்தில் ஆய்வை தொடங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதனை தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார். மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா புத்தூரில் தண்ணீர் சூழ்ந்த சம்பா, தாளடி பயிர்கள் பார்வையிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து தரங்கம்பாடி தாலுக்கா கேசவன்பாளையம் சுனாமி குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு பொதுமக்களின் குறைகளை கேட்டறிந்தார். மேலும் தண்ணீர் சூழ்ந்த பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர் அங்குள்ள மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 124 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி மற்றும் 15 வகையான மளிகை பொருட்கள், பாய், உடைகள் உள்ளிட்ட நிவாரண உதவிகளை வழங்கினார்.இப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தங்கள் வீடுகள் மிகவும் பழுதடைந்து விட்டதாகவும்  38 வீடுகள் கட்டித்தர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை மனு அளித்தனர். 




மயிலாடுதுறை மாவட்டத்தில் 67 ஆயிரம் ஹெக்டேரில் சம்பா மற்றும் தாளடி பயிர்கள் நடவு செய்யப்பட்டுள்ளது. அதில் 7 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி உள்ளதாகவும்,  மாவட்டத்தில் 98 கால்நடைகள் உயிரிழந்துள்ளதாகவும்,  7 வீடுகள் முழுமையாகவும், 246 வீடுகள் பகுதியாகவும் கனமழை காரணமாக சேதமடைந்துள்ளது என்று முதல்வரிடம் மாவட்ட ஆட்சியர் லலிதா தெரிவித்தார். 




Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X


மாணவி தற்கொலை விவகாரம் : ’பஸ்சில் செல்லும்போது இடிப்பதுபோல் நினைத்துக்கொள்’ : வழக்கறிஞர் தந்த அதிர்ச்சி தகவல்


தொடர்ந்து வடிகால் வாய்க்கால்களை தூர்வாரததால் வெள்ள நீர் வடிய வழியின்றி 10 நாட்களுக்கு மேலாக பல்வேறு பகுதிகளில் பயிர்களை அழுகி விட்டதாக விவசாயிகள் முதல்வரிடம் தெரிவித்தனர். இந்த ஆய்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி கே.என்.நேரு, மெய்யநாதன் மற்றும் மயிலாடுதுறை பாராளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா.முருகன் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் பன்னீர்செல்வம் மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் ராஜகுமார் பாதிக்கப்பட்ட விவரங்களை முதல்வரிடம் தெரிவித்தனர். பாதிப்புகள் குறித்து அனைத்து தரப்பினரிடையும் கேட்டறிந்த தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் விரைவில் அனைத்து நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.


கோவை: மேலாடையை கழட்டக் கூறி ஆசிரியர் பாலியல் தொல்லை? 11ம் வகுப்பு மாணவி தற்கொலை! தீவிர விசாரணை!