தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 2 ஆம் நிலை போலீசாருக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதில் அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், பெரம்பலூர், கரூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டுக்கல், நாமக்கல், சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 213 பேருக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த 213 பேருக்கும் கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி தொடங்கப்பட்டு இந்த  பயிற்சி நடைபெற்று வருகிறது. இவர்களுக்கு 7 மாத பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி. பாலகிருஷ்ணன் தஞ்சாவூருக்கு வருகை புரிந்தார். தொடர்ந்து தஞ்சை தற்காலிக போலீஸ் பயிற்சி பள்ளிக்கு திருச்சி மத்திய மண்டல ஐ.ஜி.பாலகிருஷ்ணன் வந்தார். பின்னர் இங்கு பயிற்சி பெறும் போலீசாருக்கு அளிக்கப்படும் பயிற்சிகள் குறித்து ஐ.ஜி. பாலகிருஷ்ணனர் ஆய்வு செய்தார். பின்னர் பயிற்சி பெறும் போலீசாருக்கு அறிவுரையும், ஆலோசனைகளையும் வழங்கினார்.




முன்னதாக அதிகாலை 5.30 மணிக்கு தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் தொடங்கிய ஓட்டப்பயிற்சி  தஞ்சை மேம்பாலம் வழியாக மருத்துவக்கல்லூரி முதல் கேட் வரை சென்று  மீண்டும் ஆயுதப்படை மைதானத்தில் முடிவந்தடைந்து. 7 கி.மீ தூர இந்த ஓட்டப்பயிற்சியில் ஐ.ஜி., பாலகிருஷ்ணன் ஓடி வர அவரைத் தொடந்து மற்ற பயிற்சி போலீசார் ஓடினர்.  7 கி.மீ. தூரம் வரை நடந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. இது பயிற்சி போலீசாருக்கு ஊக்கம் அளிக்கும் விதமாக அமைந்தது. திருச்சி மண்டல ஐ.ஜி., பாலகிருஷ்ணன் பயிற்சி போலீசாருக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அவர்களுடன் மேற்கொண்ட இந்த ஓட்டப்பயிற்சியை பொதுமக்களும் பார்த்து பாராட்டினர்.


குழந்தைகள் மற்றும் பெண்கள், முதியவர்களுக்கு ஏற்படும் பிரச்னைகளை காவல்துறைக்கு தெரியப்படுத்தும் வகையில் திருச்சி ஐ.ஜி பாலகிருஷ்ணன் திருச்சியில் இருந்து தஞ்சைக்கு சைக்கிளில் விழிப்புணர்வை ஏற்படுத்தினார். கொரோனா ஊரடங்கு காலத்தின் போது மத்திய மண்டலத்திற்குட்பட்ட மாவட்டங்களில் உதவியின்றி வசித்து வரும் மூத்த குடிமக்களை கண்டறிந்து காவல்துறை மற்றும் தன்னார்வலர்களுடன் இணைந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தார்.




திருச்சியில் நடந்த பாரம்பரிய சிலம்பக் கலைகளான கம்பு சுற்றுதல், கள்ளன்கம்பு, சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம், நெடுங்கம்பு சுற்றுதல், நடுக்கம்புசுற்றுதல், சிலா வீச்சு, பொடிகுச்சி, செடிகுச்சி, சிலுவை போத்து ஆகிய சிலம்ப விளையாட்டுக் கலைகள் பாரம்பரிய விழாவில் ஐ.ஜி. பாலகிருஷ்ணன் சுருள் வீச்சு, மான்கொம்பு, தீப்பந்தம் மற்றும் கம்பு சுற்றுதல்வித்தைகளை செய்து காட்டி அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.