தூக்கனாங்குருவிகள் தேங்காய் நார், வைக்கோல், இலைகள் தன் அலகால் தூக்கிக் கொண்டு வந்து தன் இணைக்காக கூடு கட்டும். இவை புல், அரிசி, கோதுமை, சோளம், தினை ஆகிய தானிய வகைகள், வெட்டுக்கிளி, ஈக்கள், கரையான், வண்டுகள், கம்பளிப்பூச்சி, பட்டாம்பூச்சி, சிலந்தி, சிறிய நத்தைகள், அரிசி தவளைகள் ஆகியவற்றை உணவாக உட்கொள்ளும். தூங்கணாங்குருவி பாதுகாப்பாக அமைக்கும் வீட்டினை நேராக ஒரு கோர்த்து, அதிலிருந்து தொப்பை போல ஒரு வளைவான அமைக்கும். அதிலுள்ள குழாய் போல ஒரு வளைவு பகுதியில் முட்டையிடும்.
தூங்கணாங்குருவிகள் மின்மினிப் பூச்சிகளை வயல் பகுதியிலுள்ள சேரிலிருந்து சின்ன களிமண் துளியில் கொண்டு வந்து தன் கூட்டுக்குள் வைத்துவிட்டு அதில் மின்மினிப் பூச்சிகளை ஒட்ட வைத்து வீட்டுக்கு ஒளிகூட்டும். காற்றில் விழாத அழுத்தமான பிடிமானத்தைக் கொண்டு தன் ஒற்றை அலகால் உறுதியாய் அறுந்து விழாத கூடு கட்டுவது சிறப்பானதாகும். விஞ்ஞான உலகத்திற்கே சவால் விடும் தூக்கனாங்குருவிகள் கடந்த சில ஆண்டுகளாக அழிந்து வரும் நிலையில், அத்தகைய சிறப்பு வாய்ந்த குருவிகளை பாதுகாக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பறவைகள் நல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மனித சமூகத்திற்கே சாவல் விடும் வகையிலுள்ள தூக்கனாங்குருவிகள், மிகவும் வித்தியாசமாகவும், தனித்திறமைகளை கொண்டு வாழ்க்கையை வாழும். இக்குருவிகள் தனது கூட்டில் வீடுகளை போல், வரவேற்பறை, படுக்கையறை, உணவு சேமிக்கும் அறைகள், ஜன்னல், வாசல் உள்ளிட்டவைகளை வைத்து புத்திசாலியான வகையில் கட்டும் கூடு, எவ்வளவு மழை பெய்தாலும், மழை நீர் உள்புகாது.
மேலும் தூக்கனாங்குருவிகள், ஆண் பனை மற்றும் ஈச்ச மரத்தில் மட்டும் கட்டும், பெண் பனை மற்றும் ஈச்ச மரத்தில் கட்டாது. ஏன் என்றால், பெண் மரத்தில் காய்கள் காய்த்தால், மனிதர்கள் பறிக்கும் போது, கூட்டினை கலைத்து விடுவார்கள் என்பதற்காக ஆண் மரத்தில் மட்டும் கட்டும். தூக்கானாங்குருவிக்கு முன் கூட்டியே மழை பெய்யும் திசையை அறிந்து கூடுகளை கட்டும். மேற்கு திசையில் மழை பெய்வது தெரிந்தால், கிழக்குதிசையில் வாசல் அமைத்து கூடுகட்டும், கிழக்கு திசையில் மழை பெய்வது தெரிந்தால், மேற்கு திசையில் வாசல் அமைத்து கூடு கட்டும்.
இந்த கூட்டின் வாயிலை வைத்து, விவசாயிகள் சாகுபடி செய்தது குறிப்பிடத்தக்கதாகும். இவ்வளவு சிறப்புமிக்க தூக்கனாங்குருவி தன் ஆண் துணை இறந்து விட்டால் அதுவும் இறந்துவிடும் என்பது இக்குருவியின் சிறப்பில் ஒன்றாகும். மனதர்களே ஆச்சரியப்படும் தூக்கனாங்குருவிகளை, அழியாமல் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுகொண்டுள்ளார்.