தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 179 ஆவது ஆராதனை விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் இன்று காலை சிறப்புடன் நடைபெற்றது.

Continues below advertisement


திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப் பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர்.




திருவாரூரில் 1767-ம் ஆண்டு மே-4-ந் தேதி பிறந்தவர் தியாகராஜர். இவரது தந்தை ராமபிரம்மம், தாய் சீதம்மா, சகோதரர்கள்-பஞ்சாப கேசன், ராமநாதன். இளம் வயதிலேயே தந்தையிடம் ராமதாரக மந்திரமும் “ராமகிருஷ்ணானந்த யதீந்தரிடம் ராமாஷடாக்ஷரி மந்திரமும்” உபதேசம் பெற்றார்.  திருவையாறில் தான் தியாகராஜர் வாழ்ந்து முக்தியடைந்தார். ஒரு தவமுனிவரின் வாழ்க்கை முறைப்படி தினசரி உஞ்சவிருத்தி மூலம் ராமன் எனும் பரம்பொருளின் திருப்புகழைப்பாடிப்பணிந்து, ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கிய உத்தமசீலர் தியாகராஜர். சொண்டி வேங்கட ரமணய்யர் எனும் குருவிடம் முறையாக கர்நாடக சங்கீதம் பயின்றார் உண்ணும்சோறு, தின்னும் வெற்றிலை, பருகும் நீர் எல்லாம் கண்ணனே! என்ற நம்மாழ்வாரின் சிந்தனையை அடியொற்றி எல்லாம் ராமனே! என்று பாடியவர் தியாகராஜர். இவர் பாடிய முதல் கீர்த்தனை “நமோ நமோ ராகவாய...” என்பதாகும்.


தன்னுடைய வாழ்நாளில் இரண்டு கோடி முறை ராம நாமத்தை உச்சரித்து, ராமனின் தரிசனம் காணும் பேறு பெற்ற தியாகராஜர் 1847-ம் ஆண்டு ஜனவரி 6-ந் தேதி தை மாதம் பகுள பஞ்சமி திதியில் ராமன் திருவடிகளை அடைந்து, முக்தி பெற்றார். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ சுவாமிகள் திருவையாறில் முக்தி அடைந்தார். இவர் பகுல பஞ்சமி தினத்தில் முக்தி அடைந்ததால் அன்றைய தினத்தில் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.


அதன்படி இந்த ஆண்டு 179 வது ஆண்டாக தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா வரும் ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதையொட்டி பந்தக்கால் முகூர்த்தம் இன்று தியாகராஜ ஸ்வாமிகளின் சமாதி அருகே காவிரி ஆற்றங்கரையில் நடைபெற்றது .இதில் அறங்காவலர்கள் சுரேஷ் மூப்பனார், டெக்கான் என்கே மூர்த்தி, பொருளாளர் ஆர் கணேஷ், உதவி செயலாளர்கள் கே.என். ராஜகோபாலன் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


இதுகுறித்து அறங்காவலர் சுரேஷ் மூப்பனார் நிருபர்களிடம் கூறியதாவது: திருவையாறில் ஆண்டுதோறும் தியாகராஜ ஸ்வாமிகளின் ஆராதனை விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அதன்படி இந்த வருடம் 179 வது ஆராதனை விழா வருகிற ஜனவரி 3ஆம் தேதி தொடங்கி ஏழாம் தேதி வரை திருவையாறு நடைபெற உள்ளது இதில் உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான இசை கலைஞர்கள் கலந்து கொண்டு ஏழாம் தேதி பஞ்சரத்ன கீர்த்தனைகளை ஒரே நேரத்தில் இசைத்து இசை அஞ்சலி செலுத்த உள்ளனர்.


இந்த விழா ஜனவரி 3ம் தேதி மாலை நாலு முப்பது மணிக்கு மங்கல இசையுடன் தொடங்குகிறது. விழாவுக்கு சபாவின் தலைவர் ஜி.கே.வாசன் தலைமை வகிக்க உள்ளார் . இதில் சிறப்பு விருந்தினராக தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் பங்கேற்க உள்ளார். அன்றைய தினம் இரவு தேசிய நிகழ்ச்சிகள் 9.30 மணி முதல் 11 மணி வரை நேரலையாக ஒளிபரப்பப்பட உள்ளது.


தொடர்ந்து நாள்தோறும் காலை முதல் இரவு வரை பல்வேறு இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டு தியாகராஜருக்கு இசை அஞ்சலி  செலுத்த உள்ளனர். விழாவுக்கான ஏற்பாடுகளை சபாவின் அறங்காவலர்கள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளும் இணைந்து செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.