ஆண்டு தோறும் ஜூன் 23 ஆம் நாள் உலக கைம்பெண்கள் தினம் அனுசரிக்கப்படுகிறது. கைம்பெண் நிலை, நிலைப்பாடு, சமூகக் கட்டுப்பாடுகள், உணர்வு ரீதியான விளைவுகள், பொருளாதாரம், உணவு மற்றும் வாழ்வாதார சிக்கல்கள் பற்றிய சிந்தனைகளை அனைவரிடமும் இந்த நாள் கொண்டு சேர்க்கிறது. 21 டிசம்பர் 2010 அன்று, காபூன் அதிபர், பூன்கோ ஒடிம்பாவின் கோரிக்கையை ஏற்று, ஐ.நா பொது சபையில், ஜூன் 23 ஆம் நாள், சர்வதேச கைம்பெண் தினம்” அனுசரிக்கப்படும் என்ற தீர்மானத்தை ஐ.நா நிறைவேற்றியது. உறுப்பு நாடுகள், தங்கள் நாட்டில், கைம்பெண் வாழ்வாதாரம், சமூக அந்தஸ்த்து போன்றவற்றை சீரமைக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் விடுத்தது. அதனைதொடர்ந்து அது தொடர்பான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 




Kawasaki Versys 650 : வெர்சிஸ் 650 பைக் விற்பனையைத் தொடங்கியது கவாசகி.. இதெல்லாம் ஸ்பெஷல்தான்..


தற்போது வரை வாழ்க்கைத் துணையை இழந்த பெண்ணை இரண்டாந்தர பிரஜையாக பார்க்கும் நிலை இன்னும் மாறவில்லை. மங்கலப் பொருள்களைத் தரிக்காமல் இருப்பது, மங்கல நிகழ்வுகளில் முன்னின்று செயல்படுவது போன்றவற்றை சமூகம் அங்கிகரிப்பதில்லை. அந்தப் பெண்களே ஒதுங்கி இருக்கும் மனோநிலையில் இருக்கிறார்கள். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் உலக கைம்பெண்கள் தினத்தை முன்னிட்டு விதவை பெண்கள் வாழ்வு முறை சங்கத்தின் சார்பாக விடியலை நோக்கி வீர நடை போடு என்கிற தலைப்பில் கைம்பெண்கள் மாநாடு நடைபெற்றது.




மாநாட்டை முன்னிட்டு சீர்காழி பழைய பேருந்து நிலையத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட கைம்பெண்கள் பேரணியாகச் சென்றனர். நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்ற பேரணியில் கைம்பெண்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தியும், கோஷங்கள் எழுப்பியவாறும் மாநாடு நடைபெறும் தனியார் மண்டபத்தை வந்தடைந்தனர். மாநாட்டில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். 


Watch video : அட இது ரீலா இல்ல...? ரியலா...? விஜயின் அரபிக்குத்து பாடலை அப்படியே செதுக்கி சிதறவிட்ட சிறுவர்கள்!




அதனை தொடர்ந்து நடைபெற்ற மாநாட்டில் கைம்பெண்களுக்கு என தனி நலத்துறை ஏற்படுத்த வேண்டும், அரசு இலவச நிலம் வழங்க வேண்டும், கைம்பெண்கள் மற்றும் முதியோர் ஓய்வூதிய தொகையை 1500 ஆக உயர்த்த வேண்டும் வீடு இல்லாதவர்களுக்கு வீட்டுமனையும், கோயில் நிலத்தில் வசிப்பவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டாவும் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றினர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண