தஞ்சாவூர் வழியாக வெளி மாவட்டமான ஆந்திரா மாநிலத்திலிருந்து வெளிநாட்டிற்கு கஞ்சா கடத்துவதற்காக, காய்கறி வாகனம், தவிடு மூட்டைகள், கார்கள் போன்ற பல்வேறு வாகனங்களில், போலீசாரிடமிருந்து தப்பித்து கொள்வதற்காக பயன்படுத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் வந்தது. இதனையடுத்து கடந்த செப்டம்பர் மாதம் ஆந்திரா மாநிலத்திலிருந்து, தஞ்சாவூர் வழியாக, தமிழகம் முழுவதும் விற்பனை செய்வதற்காக கார்களில் வந்த போது, டிஐஐி தனிப்படை போலீசார் 120 கிலோ கஞ்சா, இரண்டு கார்கள் மற்றும் 9 பேரை கைது செய்தனர். இதனையடுத்து, கஞ்சாவை தஞ்சாவூர் வழியாக கடத்தி வருவதாக தகவல் வந்தது. மேலும், தமிழக கடற்கரை ஓங்களிலிருந்து படகு மூலம் இலங்கைக்கு ரகசியமாக கஞ்சா கடத்தி வருவது அதிகரித்து வருகிறது. இதனை தடுக்க தஞ்சாவூர் டிஐஜி பிரவேஷ்குமார் தலைமையில், ரகசிய தனிப்படை ஒன்று அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து தஞ்சாவூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஜெயசந்திரன் மேற்பார்வையில் உதவி ஆய்வாளர் ஆர்.மகேந்திரன், சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் என்.கந்தசாமி, தலைமை காவலர்கள் கே.இளையராஜா, கே.சுந்தர்ராமன், ஆர்.விஜய் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் இருந்து வந்தனர். கஞ்சாவை கடத்துபவர்கள், ஆந்திராவில் இருந்து நாகப்பட்டினம் வழியாக ஆம்புலன்ஸ் மூலம் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட 200 கிலோ கஞ்சாவினை கடத்தி வந்து அதை இலங்கைக்கு படகு மூலம் விற்பனை செய்வது போலீசாருக்கு தெரிய வந்தது.
இதனை தொடர்ந்து, கஞ்சாவை கடத்துவதற்கான முக்கியமானவரான, நாகப்பட்டினத்தை சேர்ந்த மார்சல் டெரன்ஸ்ராஜா (34), என்பவரை, தஞ்சாவூர் சரக தனிப்படையினர், நாகப்பட்டினத்தில் ரகசிய தகவல் மூலம் பிடித்து கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை செய்ததில், பல்வேறு இடங்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 கிலோ கஞ்சா மற்றும் ஆம்புலன்ஸ் வாகனத்தை பறிமதல் செய்தனர். இதன் மதிப்பு 1 கோடி என்று போலீஸார் தெரிவித்தனர்.
மேலும் கைது செய்யப்பட்ட மார்சல் டெரன்ஸ்ராஜாவிடம், யார் யாருக்கு தொடர்பு, எப்படி ஆம்புலன்ஸ் வாகனம் ஏற்றி கொண்டு வர துணையாக இருந்தவர்கள், இதில் தொடர்புடைய மற்றவர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மார்சல் டெரன்ஸ்ராஜாவிடம் உரிய விசாரணை நடத்தினால், தமிழகத்திலுள்ள மேலும் பலர் சிக்குவார்கள் என போலீசார் தெரிவித்தனர். கஞ்சாவை பறிமுதல் செய்து, குற்றவாளியை கைது செய்ய செயல்பட்ட தனிப்படை போலீஸாரை, டிஐஜி பிரவேஷ்குமார் நேற்று பாராட்டு தெரிவித்தார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி 6 லட்சம் மோசடி - ஓ.எஸ்.மணியன் முன்னாள் உதவியாளர் கைது