தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அதிகமாக பட்டாசுகள் வெடித்ததால் புகை மண்டலமாக மாறியது திருவாரூர் மாவட்டம்

 

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு வெடி வெடிப்பததற்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. குறிப்பாக சரவெடி பயன்படுத்தக் கூடாது, மேலும் வெடி வெடிப்பதற்கான கால அளவை தமிழ்நாடு அரசு பொது மக்களுக்கு வகுத்துக் கொடுத்தது. காற்று மாசுபடாது உள்ள வெடிகளை வெடிக்க வேண்டும், அதிக ஒளி உடைய வெடிகளை வெடிக்க கூடாது என பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு விதித்திருந்தது. மேலும் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு இருக்கும் வண்ணம் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மிக அதிகமான வெடி வெடித்ததால் புகை மண்டலமாக மாறியது திருவாரூர் மாவட்டம்



அதனையும் மீறி தமிழ்நாடு முழுவதுமாக தமிழ்நாடு அரசு அறிவித்த இந்த பல்வேறு கட்டுப்பாடுகளை மீறியும் பொதுமக்கள் வெடி வெடித்து தீபாவளி பண்டிகையை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். இந்தநிலையில் திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து பெய்து வந்த மழை நேற்று முழுவதும் மழை விட்டிருந்த நிலையில் குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினரும் மகிழ்ச்சி அடைந்தனர். அதே நேரத்தில் இரவு நேரத்தில் தொடர்ந்து திருவாரூர் நகர் பகுதி மட்டும் அல்லாமல் மாவட்டம் முழுவதும் விண்ணை முட்டும் அளவில் வெடிச்சத்தங்கள் கேட்டுக் கொண்டிருந்தன. இந்த நேரத்தில் மாவட்டம் முழுவதும் புகை மண்டலமாக மாறியது. இருசக்கர வாகனத்தில் வருபவர்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சாலையில் வழிகள் தெரியாத அளவிற்கு புகைமூட்டம் முழுவதுமாக காணப்பட்டது. இதனால் வாகனத்தில் செல்வோர் மிகுந்த சிரமப்பட்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருந்தது.



இன்று காலை 7 மணி வரை மாவட்டத்தில் புகை மண்டலம் ஆகவே காட்சியளித்து இருந்தது. இதனால் காற்று மாசு அடைந்திருக்க அதிக அளவில் வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் காலை 7 மணி முதல் 8 மணி வரை அதேபோன்று இரவு 7 மணி வரை 8 மணி வரை என தமிழ்நாடு அரசு வெடி வெடிப்பதற்கான நேரம் ஒதுக்கீடு செய்திருந்தது அதனை பின்பற்றாமல் நாள் முழுவதும் தீபாவளி பண்டிகையை பொதுமக்கள் உற்சாகமாக கொண்டாடினர். அதே நேரத்தில் வெடி வெடித்ததன் காரணமாக காற்று மாசு என்பது மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வெடி வெடித்து அதன் காரணமாக தேங்கியுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் திருவாரூர் நகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.