தமிழ்நாடின் கடைசி 38வது மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் உருவாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாவட்டத்தின் முதல் ஆட்சியராக லலிதா ஐஏஎஸ் மாவட்டத்தை வரைவு செய்து தொடர்ந்து பொறுப்பு வகித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பல ஐஏஎஸ் அதிகாரிகள் பணிமாறுதல் உத்தரவை தமிழ்நாடு அரசு பிறப்பித்தது. அதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக, திருவள்ளூர் மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றிய ஏ.பி.மகாபாரதி ஐஏஎஸ் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர் தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதல் படி செயல்படுவேன், நேற்றைய தினம் புதிதாக நியமனம் செய்யப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பல ஆலோசனை வழங்கி உள்ளார்கள். குறிப்பாக தமிழக அரசுக்கு சிறப்பான பெயர் ஏற்படுத்தித் தரப்படும். அரசின் திட்டங்கள் நடைபெற்று வருவதை கள ஆய்வுப் பணி மேற்கொள்ளப்பட்டு அரசின் திட்டங்கள் மக்களுக்கு விரைவாக கிடைக்க மாவட்ட நிர்வாகம் உறுதுணையாக இருக்கும். மக்களுக்கு அரசின் திட்டங்கள் வேகமாக கிடைக்க அனைத்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
TN Weather Update: இனி தமிழ்நாட்டில் மழை இல்லை.. வறண்ட வானிலையே இருக்கும்.. லேட்டெஸ்ட் வானிலை ரிப்போர்ட் இதோ..TN Weather Update: இனி தமிழ்நாட்டில் மழை இல்லை.. வறண்ட வானிலையே இருக்கும்.. லேட்டெஸ்ட் வானிலை ரிப்போர்ட் இதோ..
மக்களை நேரில் சந்தித்து அவர்களுக்கு தேவையான கோரிக்கைகள் நிறைவேற்றித் தரப்படும். தமிழக அரசுக்கு நற்பெயரும், மாவட்ட மக்களுக்கு நன்மையும் செய்யக்கூடிய வகையில் செயல்படுவேன். சிறந்த மாவட்டமாக மயிலாடுதுறை மாவட்டம் உருவாக்கப்படும். சிறப்பாக செயல்பட முதலமைச்சர், தலைமைச் செயலர் அவர்களும் அறிவுரை வழங்கி உள்ளார்கள். அரசுக்கு மக்களுக்கும் பத்திரிகையாளர் பாலமாக விளங்க வேண்டும். அரசின் திட்டங்களையும், மக்களின் எண்ணங்களையும் நீங்கள் எடுத்துக் காட்ட வேண்டும். ஒட்டுமொத்த மாவட்ட நிர்வாகமும் சிறந்த முறையில் பணியாற்றி மயிலாடுதுறை மக்களுக்கு சிறப்பானமுறையில் பணியாற்றுவேன் என்று உறுதி அளிப்பதாக மாவட்ட ஆட்சியர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ் வருவாய் கோட்டாட்சியர்கள் அர்ச்சனா, யுரேகா, வேளாண்மை துறை இணை இயக்குனர் சேகர் உள்ளிட்ட ஏராளமான அதிகாரிகள் உடன் இருந்தனர்.
மயிலாடுதுறை ஆட்சியராக பொறுப்பேற்கும் முன்பு தனது குடும்பத்தினருடன் பிரசித்தி பெற்ற மயிலாடுதுறை மயூரநாதர் கோயில் சாமி தரிசனம் மேற்கொண்டார். தொடர்ந்து கோயில் யானை அபயாம்பிகையிடம் ஆசிபெற்றார். அப்போது கோயில் வளாகத்தில் இருந்த நரிக்குறவர் சமூதாய மக்கள் புதிய ஆட்சியருக்கு வாழ்த்து தெரிவித்தனர். அதனை இன்முகத்துடன் ஏற்றுக்கொண்ட ஆட்சியர் அவர்களுடன் இணைந்து மயூரநாதர் கோயில் யானை அபயாம்பிகை முன் நின்று புகைப்படங்கள் எடுத்துக்கொண்டார். புதியதாக பொறுப்பேற்கும் ஆட்சியரின் இந்த செயல் பொதுமக்களிடையே ஆட்சியர் குறித்த எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.