மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி அருகே திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலக புகழ் பெற்ற அபிராமி அம்மன் உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. புராண காலத்தில், பக்த மார்க்கண்டேயர் உயிரை பறிப்பதற்காக, எமன் பாசக்கயிற்றை வீசியபோது, மார்க்கண்டேயர், இங்கிருக்கும் சிவலிங்கத்தை கட்டியணைத்தார். அப்போது, இறைவன் தோன்றி, எமனை சம்ஹாரம் செய்ததாக, ஆலய வரலாறு கூறுகின்றது. அழித்தல் தொழில் நின்று போனதால் பாரம் தாங்காத பூமா தேவியின் வேண்டுகோளுக்கு இணங்க, எமனை, சிவபெருமான் மீண்டும் உயிர்ப்பித்தார். இதனால் இங்கு, ஆயுள் சம்பந்தமான, வழிபாடுகள் 60, 80, 100 வயது பூர்த்தி அடைந்தவர்கள் ஆயூஷ் ஹோமம் திருமணங்கள் செய்து சுவாமி அம்பாளை வழிபட்டால் ஆயுள் விருத்தி கிடைக்கும் என்பதால் இவ்வாலயத்தில் ஆண்டின் 365 நாட்களும் திருமணமும், யாகங்களும் நடைபெறும் ஒரே ஸ்தலாமாகும்.
இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் நேற்றிரவு இரவு பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக அரசின் ஒன்பது ஆண்டுகால சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் அகோரம் தலைமையில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக திருக்கடையூருக்கு தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வந்திருந்தார். கூட்டத்திற்கு முன்னதாக திருக்கடையூரில் உள்ள புகழ்பெற்ற அபிராமி உடனாகிய அமிர்தகடேஸ்வரர் ஆலயத்தில் சுவாமி தரிசனம் மேற்கொண்டார். தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அமிர்தகடேஸ்வரர் கோயிலில் பாஜக தலைவர் அண்ணாமலைக்கு கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து அண்ணாமலை கோபூஜை, கஜபூஜை செய்து கோயில் உள்ளே சென்று கள்ள வாரண பிள்ளையார் மற்றும் அமிர்தகடேஸ்வரர், அபிராமி அம்மன் சன்னதிகளில் மயில்சுவாமி வழிபாடு நடத்தி பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஜேபி.நட்டா, பாரத மக்களின் பெயர் மற்றும் ராசி நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்தார். அதனைத் தொடர்ந்து சாதனை விளக்கப் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட அவர் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே பொதுமக்களிடையை சிறப்புரையாற்றினார்.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்