காரைக்காலில் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு சம்பளம் 600 ரூபாய் உயர்த்தி வழங்க வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக 300-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வட்டார வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராம பஞ்சாயத்துகளிலும் 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு சம்பளம் 600 ரூபாய் உயர்த்தி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக பேரணி மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
இதில் முன்னதாக காரைக்கால் புதிய பேருந்து நிலையத்திலிருந்து தொடங்கிய இந்த ஆர்ப்பாட்டப் பேரணி, நேரு நகரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம் வரை சென்று விவசாயிகள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்பொழுது 100 நாள் வேலையை 200 நாட்களாக மாற்றி நாள் ஒன்றுக்கு சம்பளம் 600 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், பல்லாண்டு காலமாக முடிக்கிடக்கும் ரேஷன் கடைகளை உடனே திறந்து அரிசி, கோதுமை உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருள்களும் மானிய விலையில் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.