கொரோனா ஊரடங்கால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பு சார்பாக நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.

 

ஆண்டுதோறும் இஸ்லாமிய நாட்காட்டியின் 12வது மாதமான துல் ஹஜ்ஜின் 10வது நாளில் 'பக்ரீத்' கொண்டாடப்படுகிறது. இது ஒவ்வொரு நாடுகளிலும் சில மாறுதல்கள் இருக்கும். பக்ரீத் பண்டிகை தினத்தில் காலையில் தொழுகை செய்வது தான் முக்கியமாக கடைபிடிக்கும் சடங்கு. உலக அளவில் இஸ்லாமியர்கள் கொண்டாடப்படும் முக்கிய விழாக்களில் பக்ரீத் ஒன்றாகும். 

 

பக்ரீத் கொண்டாட காரணம்!

 

இஸ்லாமியர்களின் தூதுவராக நம்புவதில் ஒருவர், இப்ராஹிம். இவர் சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன் இன்றைய ஈராக்கில் வாழ்ந்து வந்தார். நெடுநாட்களாக குழந்தை பாக்கியம் இல்லாமல் இருந்த இப்ராஹிமிற்கு இறைவன் அருளால், இரண்டாவது மனைவி ஃஆசரா மூலம் ஆண் குழந்தை பிறந்தது. இஸ்மாயீஸ் என பெயரிடப்பட்ட அந்த குழந்தையின் வழி வந்தவர்களே இன்றைய அரபியர்கள் என்று நம்பப்படுகிறது.

 

இப்ராஹிமின் மகன் இஸ்மாயீல் பால்ய பருவத்தை அடைந்தபோது, அவரை தனக்கு பலியிடுமாறு கடவுள் இப்ராஹிமின் கனவில் தோற்றி அறிவுறுத்தினார்.  இதை பற்றி இப்ராஹிம் மகனின் அனுமதியுடன் பலியிட துணிந்தார். அப்போது கடவுள், சிஃப்ரயீல் என்ற வான தூதரை அனுப்பி இஸ்மாயீலை பலியிடுவதை தடுத்து நிறுத்தினார். பின் அங்கிருந்த ஆடு ஒன்றை பலியிட கடவுள் உத்தரவிட்டார். இந்த சம்பவத்தின் அடிப்படையிலேயே தியாக திருநாள் கொண்டாடப்படுகிறது.

 

இஸ்லாமியர்களுக்கு ஐந்து கடமைகள் உள்ளது. அதை அவர்கள், தங்கள் வாழ்நாளில் கட்டாயம் கடைபிடித்திருக்க வேண்டும்.

 

1. அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை முழுமையாக நம்ப வேண்டும்.

 

2. இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரும் இறைவனை தொழ வேண்டும். முடியாதவர்கள் உட்கார்ந்து கொண்டோ, படுத்துக்கொண்டோ கட்டாயம் தொழுகையில் ஈடுபட வேண்டும்.

 

3. நோன்பிருத்தல் வேண்டும்.

 

4. வசதி படைத்தோர் ஏழைகளுக்கு தானம் வழங்க வேண்டும்.

 

5. ஹஜ் பயணம் செய்ய வேண்டும். அதற்கு சென்று வர பண வசதி, தக்க உடல் நலமும், வழி துணையும் உள்ளவர்களுக்கு இது கடைமையாகிறது.

இந்த ஹஜ் பயணம் பக்ரீத்தின் போதுதான் கடைபிடிக்கப்படுகிறது. 

 

 




தியாகத் திருநாளான பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்திகள்!

 

தமிழகத்தில் பெருமளவில் ஆடு விற்பனை நடக்க பக்ரீத் பண்டிகை முக்கிய காரணமாக உள்ளது. ஆடுகள் வாங்கும் இஸ்லாமிய குடும்பத்தினார், அதை பங்கிட்டு உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் வழங்குவர். இந்த நிலையில் சௌதி அரேபியாவில் இன்று பக்ரீத்  பண்டிகை கொண்டாடபடுவதை முன்னிட்டு, நாகூர் கடற்கரையில் ஜாக் அமைப்பினர் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.  தியாக திருநாளான பக்ரீத் பண்டிகையின் போது ஆடு, ஒட்டகம் உள்ளிட்ட விலங்குகள் பலி கொடுக்கப்பட்டு, அதன் இறைச்சியை மூன்றில் ஒரு பங்காகப் பிரித்து ஏழைகளுக்கும் உறவினர்களுக்கும் கொடுத்து மகிழ்வர். நாகூரில் நடைபெற்ற சிறப்பு தொழுகையில் ஏராளமான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள்  என 1000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பக்ரீத் வாழ்த்துகளை பகிர்ந்து கொண்டனர். கொரோனா ஊரடங்கு காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற பக்ரீத் சிறப்பு தொழுகையில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிப்பதாக இஸ்லாமியர்கள் தெரிவித்தனர்.