மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார் கோயிலில், மயூரா மாடலிங் என்ற தனியார் அமைப்பு சார்பில் பேஷன் ஷோ நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டத்தில் முதன் முதலாக நடைபெற்ற  இந்த போட்டியை பிரபல திரைப்பட நடிகை யாஷிகா ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். குழந்தைகள், இளைஞர்கள் இளம்பெண்கள், திருமணமான பெண்கள் ஆகிய நான்கு வகையாக இந்த அழகு போட்டி நடைபெற்றது. 




போட்டியில் ஏராளமான சிறுவர், சிறுமியர், இளைஞர், இளம்பெண்கள், திருமணமான பெண்கள் பல வடிவமைப்பு வண்ண உடைகளை அணிந்தபடி Ramp Walk எனப்படும் ஒய்யார நடை நடந்து தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.  இது பார்வையாளர்களை வெகுவாக பரவசப்படுத்தியது. அப்போது போட்டியாளர்களின் வற்புறுத்தலால் பாதுகாப்புக்கு வந்த காவல்துறையினர்,   சிங்கம் படத்தின் பின்னணி இசைக்கு ஏற்ப கம்பீரமாக நடந்து சென்றது பார்வையாளர்களின் பாராட்டுதலை பெற்றது.




காவல்துறையினர் பல்வேறு மன அழுத்தங்களுக்கு மத்தியில் பணியில் ஈடுபட்டு வரும் சூழலில், அவர்களின் மன அழுத்தத்தை போக்க யோகா விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளும் அரசு சார்பில் நடத்தப்படுகிறது. இதுபோன்ற சூழலில் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொதுமக்களின் நண்பன் என்பதை மெய்ப்பிக்கும் விதமாக, பார்வையாளர்களின் விருப்பத்தை ஏற்று அவர்களும் ரேம்ப் வாக் நடந்து சென்றது  மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.




மேலும், மயிலாடுதுறை மாவட்டம் எருக்கூர் கிராமத்தைச் சேர்ந்த பிரன்டன் கிரிஷ் என்ற 6 வயது சிறுவன் கோட் சூட் அணிந்து ராம்ப் வாக் சென்றது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. தொடர்ந்து ஒவ்வொரு பிரிவிலும் வெற்றி பெற்றவர்களுக்கு வெள்ளி கிரீடம் அணிவித்து பரிசுகள் வழங்கப்பட்டன.நிகழ்ச்சியை மயூரா மாடலிங் அமைப்பின் நிறுவனர் மயிலாடுதுறை சேர்ந்த எமிமாள் ஏற்பாடு செய்திருந்தார்.


LPG Rate: மாதத்தின் முதல் நாளே ஹேப்பி நியூஸ்! அதிரடியாக குறைந்த சிலிண்டரின் விலை?




மேலும் பேஷன் ஷோக்கள் பெரும் நகரங்களில் மட்டுமே நடைபெற்று வரும் சூழலில் கிராமப்புற மக்களும் பங்குபெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் விதமாக  மயிலாடுதுறை அடுத்த செம்பனார் கோயில் கிராமத்தில் நடைபெற்றது பலராலும் வெகுவாக பாராட்டப்பட்டது.  மேலும் இது போன்ற நிகழ்வை பல்வேறு கிராம பகுதிகளில் விரிவுபடுத்த வேண்டும் எனவும் இதனை ஏற்பாடு செய்ய வேண்டும் என நிகழ்ச்சி ஏற்பாட்டிற்கு பலரும் வேண்டுகோள் வைத்துள்ளனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண