நடிகர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு, நாகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர், 1000 பேருக்கு கறி பிரியாணியுடன் கூடிய அன்னதானம் வழங்கி அசத்தினர். பேருந்து நிலையத்தில், பட்டாசு வெடித்து, பயணிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.


நடிகர் விஜய்யின் பிறந்த தினத்தை முன்னிட்டு நேற்று நாகையில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் சார்பில் ஏழை மற்றும் பொதுமக்களுக்கு கறி பிரியாணி விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி  நாகப்பட்டினம் அவுரித்திடலில், விஜய்யின் மக்கள் இயக்கத்தினர் ஏழை மக்களுக்கு இலவச கறி விருந்துடன் கூடிய பிரியாணி வழங்கி அசத்தினர்.




இந்நிகழ்ச்சியில், தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சுகுமாறன், வரிசையில் நின்ற மக்களுக்கு சிக்கன் பிரியாணி, ஆனியன், தாளிச்சா  உள்ளிட்டவைகளை தட்டில் வைத்து வழங்கினார். இதனை நீண்ட வரிசையில் காத்திருந்து, பொதுமக்கள் மன மகிழ்ச்சியுடன் அதனை பெற்று சென்றனர். முன்னதாக நடிகர் விஜய்யின் பிறந்த நாளை கொண்டாடும் விதமாக தளபதி விஜய் மக்கள் இயக்கத்தினர் பேருந்து நிலையம் முன்பு பட்டாசு வெடித்து, பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ந்தனர்.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
















ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண