Thiruvarur : 'மாட்டு வண்டி ஓட்டிய டெல்லி சிறப்பு பிரதிநிதி” கோட்டூரில் 47 வகையான பாரம்பரிய நெல் திருவிழா..!

மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்புயானை, கொம்பன் சேலம் சன்னா உள்ளிட்ட பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய கருவிகள்  காட்சிப்படுத்தப்பட்டன

Continues below advertisement

திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் பாரம்பரிய நெல் திருவிழாவில் 47 வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சிக்கு வைக்கப்பட்டது. நெல் திருவிழாவை டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மாட்டுவண்டியில் நம்மாழ்வார் புகைப்படத்துடன் ஊர்வலம் சென்றார்

Continues below advertisement

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சி

பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியில் மறைந்த வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் மற்றும் நெல் ஜெயராமன் தொடர்ந்து தமிழக முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி மறைந்தனர் இந்த நிலையில் அவர்களின் தொடர்ச்சியாக தற்பொழுது திருவாரூர் மாவட்டத்தில் ஆதிரங்கம் மற்றும் கோட்டூர் ஆகிய இரண்டு இடங்களில் வருடம் தோறும் பாரம்பரிய நெல் திருவிழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது அந்த வகையில் திருவாரூர் மாவட்டம் கோட்டூரில் விதைகளே பேராயுதம் இயற்கை விவசாயிகள் சங்கத்தின் சார்பில் பாரம்பரிய நெல் திருவிழா நடத்தப்பட்டது. நெல் திருவிழாவில் தொடக்கமாக மாட்டு வண்டியில் நெல் கோட்டை வைத்து நம்மாழ்வார் புகைப்படம் பொருந்திய மாட்டு வண்டியினை தமிழக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏ கே எஸ் விஜயன் மாட்டு வண்டியை ஒரு கிலோ மீட்டர் தூரம் ஒட்டி பாரம்பரிய நெல் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

47 வகையான நெல் ரகங்கள் - ஆச்சரியத்தில் வியந்த பொதுமக்கள்

அதனைத் தொடர்ந்து கோட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் 47 வகையான பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகள் கண்காட்சிக்கு வைத்தனர் இதில் மாப்பிள்ளை சம்பா, சீரக சம்பா, கருப்புயானை, கொம்பன் சேலம் சன்னா உள்ளிட்ட பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள், விவசாய கருவிகள்  காட்சிப்படுத்தப்பட்டன மேலும் இந்த நெல் திருவிழாவின் முக்கிய நோக்கம் பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுக்கும் முயற்சியாகவும் இயற்கை வழியில் உணவு உற்பத்தியை அதிகரிக்கவும் திருவிழா நடத்தப்பட்டு வருவதாக விவசாயிகள் தெரிவித்தனர்

நஞ்சு இல்லா உணவே உண்மையான வாழ்வியல்

மேலும் நஞ்சு இல்லா உணவு நம்மாழ்வார் கூற்றின்படி நிறைவேற்றவும் தற்சார்பு வாழ்வில் கிராம பொருளாதாரத்தோடு இணைந்து வாழ விதைகளை பேராயினும் என்ற கூற்றின்படி இந்த நெல் திருவிழா நடத்தப்பட்டதாகவும் விவசாயிகள் தெரிவித்தனர் மேலும் இந்த நெல் திருவிழாவில் சிறந்த விவசாயிக்கான விருது பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் விவசாயிகளுக்கான விருது வழங்கப்பட்டது.

200 விவசாயிகளுக்கு 2 கிலோ நெல் 

மேலும் இந்த திருவிழாவில் முக்கிய நிகழ்வாக பாரம்பரிய நெல் திருவிழாவில் கலந்து கொள்ளும் 200 விவசாயிகளுக்கு இரண்டு கிலோ விதம் பாரம்பரிய நெல் இலவசமாக வழங்கப்பட உள்ளது அதேபோல் அடுத்த ஆண்டு நடைபெறும் நெல் திருவிழாவில் நான்கு கிலோ வீரமாக விவசாயிகள் நெல்லை திரும்ப அளிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Continues below advertisement
Sponsored Links by Taboola