நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைபர் படகு, வலைகள் உள்ளிட்ட பொருட்களுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டது. போலீசார் குவிக்கப்பட்டதால் பதற்றம் நிலவியது.

 

நாகை மாவட்டம் நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் மீன் விற்பனை செய்வதில் கீழ்பட்டினச்சேரி மற்றும் மேலபட்டினச்சேரி கிராம மீனவர்களுக்கு இடையே கருத்து வேறுபாடு மற்றும் மோதல் நிலவி வருகிறது. நேற்றைய தினம் இரு கிராமங்களுக்கு இடையே மோதல் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியான நிலையில் இரு தரப்பினர் மீதும் காவல்துறையினர் கைது நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் துறைமுகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு இருந்தபோதும், நாகூர் மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த விஜி என்பவரின் பைபர் படகை மர்ம நபர்கள் தீ வைத்து தப்பி சென்றனர்.

 



 

 

பற்றி எறிந்த தீயில் வலைகள், ஐஸ் பெட்டி உள்ளிட்ட தளவாட பொருட்கள் முழுவதும் எரிந்து நாசாமயின. அதனை தொடர்ந்து துறைமுகத்தில் திரண்ட மீனவ பெண்கள் கதறி அழுது, படகுக்கு தீ வைத்த நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர். இந்த சம்பவத்தில் 5 பேர் மீது புகார் அளித்துள்ளதாக கூறிய மற்றொரு மீனவர்கள், படகை எரித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுத்தியுள்ளனர்.