மயிலாடுதுறையில் தருமபுரம் ஆதீன குமரக்கட்டளையில் ரோட்டரி சங்கங்கள் மற்றும் மகாத்மா காந்தி கண் மருத்துவமனை சார்பில் சேவை நோக்கத்தோடு புதிய அதிநவீன கண்பரிசேதனை மையம் (விஷன் சென்டர்) திறக்கப்பட்டது. முதல் நாள் முற்றிலும் இலவசமாக கண் பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து ரூ 50 மட்டும் கட்டணம் வசூலித்துக் கொண்டு கண் பரிசோதனை நடத்தப்பட உள்ளது.  இந்த விஷன் சென்டர் சார்பில் தினமும் ஒரு கிராமத்துக்கு சென்று வீடு வீடாக கண் பார்வை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி கண்ணில் பிரச்னை இருக்கும் பட்சத்தில் விஷன் சென்டருக்கு அழைத்து வந்து முழுமையாக பரிசோதனைகளில் ஈடுபடுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.




இந்த அதிநவீன கண்பரிசோதனை மையத்தை தருமபுரம் ஆதீனம் 27-வது குரு மகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், மாவட்ட ஆட்சியர் மகாபாரதி ஆகியோர் திறந்து வைத்தனர். அப்போது, மயிலாடுதுறை மாவட்டம் கஞ்சாநகரம் கிராமத்தை சேர்ந்த ரம்யா என்ற பெண் பிறவியிலேயே கண் பார்வை இல்லாத தனது 7 வயது ஆகும் மௌனிஷ்,  5 வயது ஆகும் ஆகாஷ் ஆகிய இரண்டு மகன்களை அழைத்து வந்து மாவட்ட ஆட்சியரின் கால்களில் விழுந்து கூலி தொழிலாளியான தங்களால் தொடர்ந்து  மருத்துவ சிகிச்சை  அளித்து தங்கள்  குழந்தைகளுக்கு பார்வை வர வழிவகை செய்ய முடியவில்லை  என்றும், தனது குழந்தைகளுக்கு கண்களில் ஒளி ஏற்படுத்தித் தர கோரி கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்தார்.


August New Cars: கார் பிரியர்களே, ஆகஸ்டில் வெளியாக உள்ள 5 புதிய கார்கள்.. உங்களுக்கான பட்டியல் இதோ..!




இதையடுத்து மாவட்ட ஆட்சியர் அவர்களை திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரக் கூறினார். தனது பார்வை அற்ற குழந்தைகளுக்காக தாய் மாவட்ட ஆட்சியர் காலில் விழுந்து கோரிக்கை வைத்த சம்பவம் அங்கு உள்ளவர்களை கண்கலங்க செய்தது.


மேலும் பல சுவாரஸ்யமான செய்திகளை காண :


Follow @ Google News : கூகுள் செய்திகள் பக்கத்தில் ABP நாடு செய்திகளை உடனுக்குடன் பெற


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial  என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.