உள்ளாட்சி நகர்புற தேர்தல் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்திலுள்ள 20 பேரூராட்சிகளின் வாக்கு எண்ணிக்கை கடந்த 22 ந்தேதி நடைபெற்றது. இதில் தஞ்சாவூர் மாவட்ட பேரூராட்சிகளில் மிகக்குறைவான அளவில் வாக்குகள் பெற்ற சுவாமிமலை பேரூராட்சி 7-வது வார்டு பாஸ்கர் (அமுமுக)-2 வாக்குகள், வெங்கட்ராமன் (பாஜக)-3 வாக்கு,  11 -வது வார்டு தங்கவேல் (அமமுக)-2 வாக்கு,  13 -வது வார்டு வீரமணி (அமமுக) -1 வாக்கும் பெற்றுள்ளார்.


திருநாகேஸ்வரம் பேரூராட்சி 1 -வது வார்டு சங்கர் (சுயே) வாக்குகள் ஏதும் பெறவில்லை. அதே வார்டு முத்துக்குமார் (நாதக)-3 வாக்கு, 10 -வது வார்டு, செந்தில்குமார் (நாதக)-2 வாக்கு,  11 -வது வார்டு ஷீலா (பாஜக)-2 வாக்குகளை பெற்றுள்ளார். மெலட்டூர் பேரூராட்சி 1 -வது வார்டு கவிதா (பாமக)-3 வாக்கு, 11 -வது வார்டு ராகவன் (அமமுக)-1 வாக்கு, சாமு (சுயே), செந்தில்குமார் (சுயே) இருவரும் வாக்கு ஏதும் பெறவில்லை.14-வது வார்டு சந்திரமோகன் (அதிமுக)-1 வாக்கு.




மேலத்திருப்பூந்துருத்தி பேரூராட்சி 2-வது வார்டு கயல்விழி (அதிமுக)-2 வாக்கு, 5- வது வார்டு ரதியா (நாதக)-1 வாக்கு, 6-வது வார்டு அருண்ரெஜீஸ் (நாதக)-1 வாக்கு, 7-வது வார்டு சரவணன் (நாதக)-1 வாக்கு, 9-வது வார்டு செல்வி (அதிமுக)-2 வாக்கு.அம்மாபேட்டை பேரூராட்சி 3-வது வார்டு முருகானந்தம் (பாமக)-3 வாக்கு, 5-வது வார்டு தமிழ்பாலன் (நாதக)-2 வாக்கு.  ஒரத்தநாடு பேரூராட்சி 3-வது வார்டு முருகானந்தம் (நாதக) வாக்கு ஏதும் வாங்கவில்லை, 6- வது வார்டு பாலசுந்தரம் (அதிமுக)-3,  10-வது வார்டு சுதாகர் (நாதக) -1வாக்கு, 14-வது வார்டு நஜிம்பாஷாஅஜிஸ் (நாதக)-1 வாக்கு.


ஆடுதுறை பேரூராட்சி 6 வது வார்டு ஹலில்ரஹ்மான் (நாதக)-1 வாக்கு, 7- வது வார்டு பாக்யலெட்சுமி (சுயே)-2 வாக்கு. அய்யம்பேட்டை பேரூராட்சி 2-வது வார்டு ரஞ்சித்குமார் (பாமக)-3 வாக்கு, 3- வது வார்டு முத்துலெட்சுமி (அமமுக)-1 வாக்கு. பேராவூரணி பேரூராட்சி 9-வது வார்டு இன்பவள்ளி(சுயே)-2 வாக்கு, 12-வது வார்டு பாண்டிதுரை (நாதக)-3 வாக்கு. திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி 5-வது வார்டு அருள்மொழிவர்மன் (நாதக)-1 வாக்கு, 15 -வது வார்டு சதீஷ் (நாதக)-2 வாக்கு.   திருவையாறு பேரூராட்சி 4 –வது சக்திவேல் (அமமுக)-3 வாக்கு, 14-வது வார்டு கோ.சந்திரசேகர் (பாமக), 15-வது வார்டு கு.சந்திரசேகரன்(பாமக) இருவரும் வாக்கு ஏதும் பெறவில்லை.




திருப்பனந்தாள் பேருராட்சி 4 -வது வார்டு அஜித்குமார் (பாஜக)-2 வாக்கு, 7 -வது வார்டு தமயந்தி (அமமுக) வாக்குகள் ஏதும் பெறவில்லை. வல்லம் பேரூராட்சி 11 -வது வார்டு மாணிக்கவாசகம் (நாதக)-3 வாக்கு, 15- வது வார்டு மேரிபிரிசில்லா (அமமுக) -3 வாக்கு. பாபநாசம் பேரூராட்சி 5- வது வார்டு ஜான் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மா-லெ)-3 வாக்கு, விஜய்பாபு(அமமுக)-2 வாக்கு, நரேஷ்குமார் (பாமக)-1 வாக்கு, 8-வது வார்டு அஷ்ரப்அலி (நாதக)-3 வாக்கு, 12 வது வார்டு லலிதா (பாஜக)-2 வாக்கு.  வேப்பத்தூர் பேரூராட்சி 5-வது வார்டு ராஜன் (சுயே) வாக்கு ஏதும் வாங்கவில்லை.


சோழபுரம் பேரூராட்சி 2- வது வார்டு பிரபாவதி (அமமுக)3 வாக்கு, 3-வது வார்டு  முகமது இஸ்மாயில் (அமமுக)- 1 வாக்கு, 7- வது வார்டு மணிமேகலை (அமமுக) -1 வாக்கு. திருவிடைமருதூர் பேரூராட்சி 3 – வது வார்டு மாரியப்பன் (அமமுக)-3வாக்கு,  12-வது வார்டு ராஜேந்திரன் (அமமுக)-1 வாக்கு,  13 -வது வார்டு ரமேஷ் (பாமக)-3 வாக்கு, அஜித்குமார் (சுயே)-1 வாக்கு வாங்கியுள்ளார்.