Just In

உடல், மனம், ஆன்மாவிற்கு சமநிலையை வழங்கும் பதஞ்சலியின் அஷ்டாங்க யோகாவின் சக்தி

“உண்மையாவே அமைதி வேணும்னு 2 வாரத்துல நிரூபிங்க, இல்லைன்னா அவ்ளோதான்“ புதினுக்கு ட்ரம்ப் கெடு

எங்களுக்கு எம்.பி சீட் குடுத்தே ஆகணும்; சொன்ன வார்த்தைய காப்பாத்துங்க - EPS-க்கு பிரேமலதா செக்

Anbumani vs Ramadoss: சந்திக்கு வந்த சண்டை.. ராமதாசே சொன்ன பகீர் குற்றச்சாட்டுகள்! என்ன செய்யப்போகிறார் அன்புமணி?

"என்னுடைய சாதி பத்தியே அப்போதான் தெரிஞ்சிகிட்டேன்" என்ன சொன்னார் துணை ஜனாதிபதி தன்கர்?
Shiva Rajkumar | "எங்க அண்ணன்டா கமல்" கொந்தளித்த நடிகர் சிவராஜ் குமார்! கன்னட வெறியர்களுக்கு பதிலடி
திருவாரூர் : இன்று ஒரு நாளில் 38 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு - மாவட்ட ஆட்சியர் தகவல்.
கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement

ஆட்சியர் காயத்ரி
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடிக்கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதனடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தியது. அதனை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின் அடிப்படையில் சுகாதாரத்துறை சார்பில் தமிழ்நாடு முழுவதும் கடந்த மூன்று வாரங்களில் 3 மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் இன்று நான்காவது மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாம் இன்று காலை தொடங்கி பொதுமக்களுக்கு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்று ஒரேநாளில் 38 ஆயிரம் நபர்களுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் 400 மையங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அவசியம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மக்களிடம் எடுத்துசென்று அதன் மூலம் முழுமையான பயனை மக்களிடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக எடுத்துக்கூறி செயலாற்றி வருகிறார்.
ஏற்கெனவே நடைபெற்ற தடுப்பூசி முகாமில் திருவாரூர் மாவட்டத்தில் நடமாடும் கொரோனா தடுப்பூசி முகாம் நிலையான தடுப்பூசி முகாம் மருத்துவமனைகள் என பல்வேறு வகையில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதை எளிதாக்கி செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் நடைபெற்ற மூன்றாவது தடுப்பூசி முகாமில் 319 இடங்களில் 44 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இம்முகாமில் இதுநாள்வரை தடுப்பூசி எடுத்துக்கொள்ளதவர்கள், உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதனை கருத்தில்கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தடுப்பூசி பொதுமக்கள் அனைவரும் செலுத்திக்கொள்ள வேண்டுமென மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.