திருவாரூரில் இன்று ஒரே நாளில் 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு...!

மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தற்போது வரை 633 மையங்களில் 11 ஆயிரம் நபர்கள் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement
இந்தியா முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றின் காரணமாக லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் கோடி கணக்கான மக்கள் இந்த தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொரோனா தொற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்ள மத்திய அரசு கோவாக்ஸின், கோவிஷுல்டு என்ற இரண்டு தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு அந்தந்த மாநில அரசுகள் மூலமாக வழங்கி பொதுமக்களுக்கு செலுத்தி வருகின்றது. அதன் அடிப்படையில் தமிழ்நாட்டில் மாவட்டங்கள் தோறும் சுகாதாரத்துறை சார்பில் அனைத்து தரப்பு மக்களுக்கும் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்பொழுது தமிழ் நாட்டில் மூன்றாவது அலை பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் 18 வயதிற்கு மேல் உள்ள அனைவருக்கும் தடுப்பூசி செலுத்த வேண்டும் என்ற அடிப்படையில் அரசு அதிவேகமாக தடுப்பூசிகளை பொதுமக்களுக்கு செலுத்தி வருகிறது. அதனை முன்னிட்டு இன்று திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 63 ஆயிரம் நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 7 மணி முதல் 633 மையங்களில் முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

 
“கொரோனா நோய் தொற்றிலிருந்து தங்களை பாதுகாத்துகொள்ள அனைவரும் கொரோனா தடுப்பூசி முகாமினை பயன்படுத்தி பயனடையுமாறு மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் அவர்கள் கேட்டுக்கொண்டுள்ளார். கொரோனா நோய் தொற்றிலிருந்து தமிழக மக்களை பாதுகாப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. மேலும், கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மை பாதுகாத்துகொள்ள அவசியம் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதனை அனைத்து மக்களிடம் எடுத்துசென்று அதன் மூலம் முழுமையான பயனை மக்களிடத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மூலமாக எடுத்துக்கூறி செயலாற்றி வருகிறார் இன்று திருவாரூர் மாவட்டத்தில் 633 இடங்களில் 63,200 நபர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு இன்று காலை 7 மணி முதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. இம்முகாமில் இதுநாள்வரை தடுப்பூசி எடுத்துகொள்ளதவர்கள், உலக நாடுகளையே அச்சுறுத்தி கொண்டிருக்கும் கொரோனா நோய் தொற்றிலிருந்து நம்மையும், சமுதாயத்தையும் பாதுகாத்துக்கொள்ள கட்டாயம் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். கொரோனா தடுப்பூசி எடுத்துகொண்டால் தான் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகும் என்பதனை கருத்தில்கொண்டு இந்த வாய்ப்பினை பயன்படுத்தி அனைவரும் தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திருவாரூர் மாவட்டம் முழுவதும் இன்று காலை முதல் தற்போது வரை 633 மையங்களில் 11 ஆயிரம் நபர்கள் இதுவரை முதல் தவணை மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தியுள்ளதாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன் திருவாரூர் புதிய பேருந்து நிலையம், பழைய பேருந்து நிலையம், புலிவலம் அரசு மேல்நிலைப்பள்ளி, திருவாரூர் நகராட்சிக்கு உட்பட்ட முதலியார் தெருவில் உள்ள அரசு பள்ளி, மூலங்குடி அரசு பள்ளி, ஆகிய இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறும் இடத்தை நேரடியாக சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். ஒட்டுமொத்தமாக மாவட்டம் முழுவதும் இதுவரை தடுப்பு ஊசி செலுத்தப்பட்ட நாளிலிருந்து இன்று வரை 5 லட்சத்து 52 ஆயிரத்து 775 நபர்கள் கொரோனா தடுப்பு ஊசி செலுத்தி கொண்டுள்ளதாகவும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார் தொடர்ந்து தடுப்பூசி செலுத்தி கொள்ளாத மக்கள் அனைவரும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Continues below advertisement
Sponsored Links by Taboola