இலங்கைக்கு பைபர் படகு மூலம் கடத்த இருந்த 2 லட்சத்து 20,000 ரூபாய் மதிப்புள்ள 206 கிலோ கஞ்சா மற்றும் பைபர் படகு பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலில் ஈடுபட்ட 3  நபர்களை சுங்கத்துறையினர் அதிகாலையில் கைது செய்தனர். 


ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து நாகை வழியாக இலங்கைக்கு படகு மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக நாகை சுங்கத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சுங்கத்துறையினர் நாகை அருகே செருதூர் வேளாங்கண்ணி இடையே செல்லும் வெள்ளை ஆற்றில் சோதனை மேற்கொண்டனர்.


அப்போது படகில் இருந்து தப்பி ஓட முயன்றவர்களை தடுத்து அதிரடியாக பிடித்தனர். சோதனையில் ரெண்டு லட்சத்து 20 ஆயிரம் மதிப்புடைய 220 கிலோ கஞ்சா 9 மூட்டைகளில் இருப்பது தெரிய வந்தது.  கடத்தலில் நாகை மாவட்டம் புஷ்பவனத்தைச் சேர்ந்த அருள்அழகன், காஞ்சிநாதன், நாலுவேதபதியைச் சேர்ந்த வேணுகோபால் உட்பட 3 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட பைபர் படகையும் பறிமுதல் செய்தனர்.


மேலும் கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்ட நபர்களை கைது செய்துள்ள  நாகை சுங்கத்துறையினர் அவர்களை நாகையில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்தனர். அங்கு சுங்கத்துறை கண்காணிப்பாளர்கள் பிரேம்பாபு, நமச்சிவாயம், உமர்முகமது, சுனில் உள்ளிட்டோரிடம் கஞ்சா எங்கிருந்து வாங்கப்பட்டது, இலங்கைக்கு யாரிடம் விற்பனைக்காக கொண்டு செல்கிறீர்கள், படகின் உரிமையாளர் யார் என நேரில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.