திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தனது காதலியான +1 படிக்கும் மாணவியை கர்ப்பமாக்கிய இளைஞரை போக்சோ சட்டத்தில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் கைது செய்துள்ளனர். தங்களது மகள் திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்ததை அறிந்து பெற்றோர் திட்டியதால் மனமுடைந்த அச்சிறுமி விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு தாலுக்கா,

  வளப்பக்குடியைச் சேர்ந்தவர் சாமிநாதன் (27). டாடா மினி வேன் சொந்தமாக  டிரைவராக உள்ளார். சாமிநாதன், அதே பகுதியைச் சேர்ந்த தனது உறவினரான 16 வயது சிறுமி, அடிக்கடி அவர்களது வீட்டிற்கு சென்று வரும் நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதனால் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து வந்துள்ளார்.


திருக்காட்டுப்பள்ளியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் +1 படித்துவரும் மாணவியை, அடிக்கடி சந்தித்து வந்த நிலையில், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வோம் என உறுதி மொழி அளித்தார். சாமிநாதன் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகளை கூறியதை நம்பி, மாணவி, சாமிநாதனுடன் நெருங்கி  பழகியுள்ளார். காதல் விஷயம் பெற்றோர்களுக்கு தெரிந்தால் பிரச்சனையாகி விடும், அதனால் இருவரும் சந்திப்பை தவிர்த்து கொள்ளலாம் என மாணவி கூறியுள்ளார். மேலும்  நான் படித்து கொண்டிருக்கின்றேன், படித்த முடித்த பிறகு காதலை பற்றி பேசிக்கொள்வோம் என்று தெரிவித்துள்ளார். அதற்கு சாமிநாதன், மாணவியிடம், உன்னை கட்டாயம் திருமணம் செய்து கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார். சாமிநாதனின் வாக்குறுதியை நம்பிய மாணவியும், சாமிநாதனும் அடிக்கடி இருவரும் தனிமையில் இருந்துள்ளனர்.  அதன் விளைவாக மாணவி, 3 மாத கர்ப்பிணி ஆனார்.




இதுபற்றி அறிந்த சாமிநாதன், 18 வயது பூர்த்தி அடையாததால் தான் திருமணம் செய்து கொள்ள முடியாது, 18 வயது பூர்த்தியடைந்த பிறகு திருமணம் செய்து கொள்ளலாம் என்ற காரணம் காட்டி அச்சிறுமியை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்.அம்மாணவி, தான் கர்ப்பம் தரித்துள்ள தகவலை தனது பெற்றோரிடம் கூறாமல் இத்தனை நாட்களும் மறைத்து வந்துள்ளார்.  இந்நிலையில், தங்களது மகளின் உடலில் மாறுபாடு ஏற்பட்டதையறிந்த அறிந்த மாணவியின் பெற்றோர்கள், விசாரித்த போது, தனது திருமணம் ஆகாமலேயே கர்ப்பம் தரித்திருப்பதை அறிந்து மாணவியின் பெற்றோர்கள் அதிரிச்சியடைந்து திட்டியுள்ளனர். வெளியில் தெரிந்தால் அவமானமாகி விடும், காதலனும் திருமணம் செய்ய மறுத்து விட்டார், பெற்றோர்களும் திட்டுகிறார்கள் என்று மனமுடைந்த மாணவி வீட்டிலிருந்து பூச்சிக்கொல்லி  விஷ மருந்து குடித்தார்.




அம்மாணவி தான்  தற்கொலை செய்து கொள்ள விஷமருந்திய  தகவலை பெற்றோர்களிடம் கூறியதற்கு பிறகு, அருகிலுள்ளவர்கள், அம்மாணவியை உடனடியாக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையிலுள்ள கர்ப்பிணியான மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இதுபற்றிய புகாரின்பேரில், திருவையாறு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீஸார் போக்சோ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து அச்சிறுமியின் கர்ப்பத்துக்கு காரணமான சாமிநாதனை கைது செய்தனர்.