தஞ்சாவூர்: குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வரும் நிலையில் கொள்முதல் செய்வதற்கு தடை ஏற்படாமல்  இருக்க கொல்கத்தாவில் இருந்து தஞ்சைக்கு சரக்கு ரயில் மூலம் 5460 பேரல் சாக்குகள் தஞ்சைக்கு வந்தது. அதனை லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்கும் அனுப்பிவைக்கப்பட்டது.

Continues below advertisement

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை உட்பட பல பகுதிகளில் குறுவை அறுவடை பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. கடந்த செப்டம்பர் 1ம் தேதி முதல் மத்திய, மாநில அரசுகள் நெல் ஒரு குவின்டாலுக்கு புதிய ஆதார விலை அறிவித்தது. இதன்படி குவிண்டாலுக்கு ஒன்றுக்கு ரூ.2545 அறிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement

தற்போது தஞ்சை மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் முன்கூட்டியே குறுவை சாகுபடி செய்யப்பட்ட பகுதிகளில் அறுவடை பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் 10 நாட்களில் இந்த அறுவடைப்பணிகள் இன்னும் அதிகரிக்கும். இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் சாக்கு தட்டுப்பாட்டால் கொள்முதல் பணிகளில் தொய்வு ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொல்கத்தா மாநிலத்தில் இருந்து 27,30,000 சாக்குகள் சரக்கு ரயிலில் தஞ்சைக்கு வந்தது. 

அதனை 150 லாரிகள் மூலம் தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள நெல் சேமிப்பு கிடங்குகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பாபநாசம், கும்பகோணம், திருவிடைமருதூர், திருவோணம், பட்டுக்கோட்டை, பேராவூரணி, திருக்காட்டுப்பள்ளி என 10 தாலுகா உள்ளது. சரக்கு ரயிலில் வந்த சாக்குகள் அனைத்தும் பிரித்து மேற்கண்ட தாலுகாக்களுக்கு அனுப்பப்பட்டது. 

தஞ்சை மாவட்டத்தில் வரும் 8ம் தேதி முதல் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்நிலையில் மருங்குளம், பட்டுக்கோட்டை அருகே உள்ள கார்கா வயல் பண்ணை வயல் உள்ளிட்ட பகுதிகளில் நெல்முட்டைகள் தேங்கியுள்ளது. எனவே மழை காலம் தொடங்குவதற்கு முன்பு அங்கு தேங்கியுள்ள நெல்களை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தரப்பில் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

இதேபோல் தஞ்சை மாவட்டத்தில் பூதலூர், சித்திரக்குடி, கல்விராயன்பேட்டை, ஆலக்குடி, எட்டு கரம்பை, மருங்குளம், நாஞ்சிக்கோட்டை, அம்மாபேட்டை, மாரியம்மன் கோயில், சாலியமங்கலம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் குருவை சாகுபடியான 120 நாள் பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு இன்னும் 3 வாரங்களில் அறுவடைக்கு வந்துவிடும் நிலையில் உள்ளது. தஞ்சை மாவட்டம் முழுவதும் இலக்கை எட்டி 1.97 லட்சம் ஏக்கரில் குறுவைப் பணிகள் நடைபெற்று உள்ளது.

மேலும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குறுவை சாகுபடி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று அறுவடைக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் அறுவடை செய்யப்படும் நெல்லுக்கு சாக்கு தட்டுப்பாடுகள் ஏற்படக்கூடாது என்பதற்காக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் சார்பில் கொல்கத்தாவில் இருந்து சாக்குகள் வரவழைக்கப்பட்டது. அதன்படி 5460 பேரல் சாக்குகள் சரக்கு ரயிலில் தஞ்சை வந்தது. ஒரு பேரல் என்பது 500 சாக்குகள் ஆகும். அதன்படி 27,30,000 சாக்குகள் நேற்று தஞ்சை வந்தது. 

அதனை லாரிகள் மூலம் சாக்குகள் ஏற்றப்பட்டு தஞ்சை மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவில் உள்ள சேமிப்பு கிடங்கிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் கொள்முதல் பணிகள் தடையின்றி நடக்கும் என்ற நம்பிக்கை விவசாயிகள் மத்தியில் எழுந்துள்ளது.